பென்டிரைவில் கோப்புகள் எல்லாம் ஐகானாக மாறிவிட்டிருந்தால்... - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 17, 2012

பென்டிரைவில் கோப்புகள் எல்லாம் ஐகானாக மாறிவிட்டிருந்தால்...



இரண்டு நாட்களுக்கு முன் நண்பரின் பென் டிரைவை (Pen drive) கொண்டுவந்து கொடுத்து வைரஸ்கள் நிறைய நுழைந்துவிட்டன என்றும் சுத்தமாக்கி தருமாறும் கேட்டார்.என்னுடைய கணிணியில் Avast Free Antivirus போட்டிருக்கிறேன். பென் டிரைவைச் செருகி சோதனை செய்த பின்னர் 5 W32.blackworm வைரஸ்கள் இருப்பதாக காட்டியது. அவற்றை அழிப்பதற்கு Action->Delete All என்பதைக் கொடுத்தவுடன் எனது அவாஸ்ட் மென்பொருள் முடங்கியது. “Avast Registration Failed” என்று தகவலும் வந்தது.
 
என்னடா சோதனை என பென் டிரைவை வெளியே எடுத்துவிட்டு வேகமாக ஆன்லைனில் நுழைந்து அவாஸ்ட்டின் லைசென்ஸை மீண்டும் புதுப்பித்து வெளியே வந்து கணிணியை நன்றாக சோதித்ததில் பிரச்சினை ஒன்றுமில்லை. சரி திரும்பவும் பென் டிரைவை உள்ளே போட்டு சோதித்தேன். ஒன்றுமில்லை என சொல்லவும் பென் டிரைவை திறந்து பார்த்தால் அனைத்து கோப்புகளும் போல்டர்களும் ஐகான்களாக மாறியிருந்தது.


பென் டிரைவில் உள்ள கோப்புகள் மற்றும் போல்டர்கள் வைரஸ்களின் பாதிப்பு காரணமாக சிலநேரம் ஐகான்களாக மாறிவிடுகின்றன. அந்த மாதிரி உள்ள கோப்புகளை திறக்க முயற்சித்தாலும் திறக்காது. இதனால் அதில் உள்ள தகவல்கள் அழிந்துவிடவில்லை. தற்போதைக்கு காட்டும் போது ஐகானாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது?

1. Start - > Run செல்லவும்
2. அதில் Cmd என்று தட்டச்சிடவும்.
3. பின்னர் வரும் கமாண்ட் விண்டோவில் கீழ்க்கண்ட வரியை
அடித்து எண்டர் தட்டவும்.

attrib -h -r -s /s /d X:\*.*

இதில் X என்பது உங்கள் பென் டிரைவின் எழுத்தைக்குறிக்கும்.


4. இப்போது உங்கள் கோப்புகளும் போல்டர்களும் மீட்கப்பட்டிருக்கும்.

இறுதியாக உங்கள் கணிணியை Malwarebytes மென்பொருள் கொண்டு
Full scan செய்து கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
நன்றி.

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot