அதிவேக இண்டர்நெட் சேவை பலூன் இலங்கை வான்வெளியில் பிரவேசம் - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Tuesday, February 16, 2016

அதிவேக இண்டர்நெட் சேவை பலூன் இலங்கை வான்வெளியில் பிரவேசம்


தமிழில் - மீயல்லை ஹரீஸ் 
நன்றி:- http://www.google.com/loon/
 
"Project Loon" என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நேற்று  திங்கள் இலங்கையில் ஆரம்பித்துள்ளது .
 
இப் பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது. இது அமெரிக்காவின் தென் பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
 
நாடெங்கிலும் மலிவான விலையில் இன்டர்நெட் சேவையின் விஸ்தரிப்பு இதனூடாக எதிர்பார்க்கபடுகிறது.
 
விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஆகாயத்திலேயே இந்த பலூன்கள் நிலை கொண்டிருக்கும். மறுசுழற்சி செய்ய முடியுமான இந்த பலூன்கள் 180 நாட்கள் வாழ்தகவுடையன.
 
20 மில்லியன் சனத்தொகையை உடைய இலங்கையில் 3.3 மில்லியன் நடமாடும் இன்டர்நெட் தொடர்புகளும், 630,000 நிலையான சந்தா தொடர்புகளும் உள்ளன!
 
1989 ஆம் ஆண்டு கையடக்க தொலை பேசியை தெற்காசியாவிலேயே முதலில் அறிமுகப்படுத்திய  நாடு இலங்கையாகும் .அதே போல் 2004 ஆம் ஆண்டு 3G தொழிநுட்பத்தையும் 2014 ஆம் ஆண்டு 4G தொழிநுட்பத்தையும் இப் பிராந்தியத்தில் முதலாவதாக இலங்கை அறிமுகப்படுத்தியது.

1 comment:

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot