பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ? - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Tuesday, February 26, 2013

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ?



சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை Copy செய்யும் போது "Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும். இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம்.

உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை கொடுத்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.

✪✪✪✪✪✪✪  anasgrafix.blogspot.com ✪✪✪✪✪

2 comments:

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot