பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை நம் நண்பர்கள் ஏதேனும் Application அல்லது Game பயன்படுத்தும் போது நமக்கும் அதை பயன்படுத்த சொல்லி Invite வருவது. இதை நமக்கு அனுப்பாமல் நாம் Block செய்ய முடியும்.
நீங்கள் இரண்டு விதமாக Block செய்யலாம். ஒன்று Invitation அனுப்பும் நபரை அது அனுப்ப இயலாதவாறு செய்யலாம். இதனால் அவர் உங்கள் நண்பர்கள் லிஸ்டில் இருப்பார், உங்கள் status களை அவரால் பார்க்க முடியும். அவரால் உங்களுக்கு எதுவும் Game, Application Request அனுப்ப இயலாது அவ்வளவே.
இரண்டாவது குறிப்பிட்ட Game அல்லது Application- ஐ Block செய்வது. இதனால் யார் அந்த Game அல்லது Application invite அனுப்பினாலும் உங்களுக்கு வராது.
நான் பரிந்துரைப்பது முதலாவது. வேண்டும் என்றால் இரண்டாவதையும் நீங்கள் செய்து கொள்ளலாம்.
இப்போது Facebook >> Privacy Settings பகுதிக்கு செல்லவும். அதில் இடது புற Side Bar பகுதியில் Blocking என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது Manage Blocking என்ற இந்த பக்கத்தில் "Block app invites" என்ற பகுதியில் Invite அனுப்பும் நண்பரின் பெயரை கொடுக்க வேண்டும். இதனால் இனிமேல் அவரிடம் இருந்து உங்களுக்கு Invite எதுவும் வராது.
அடுத்து "Block Apps" என்ற பகுதியில் குறிப்பிட்ட Application அல்லது Game பெயரை கொடுத்து அவற்றையும் Block செய்யலாம்.
அவ்வளவு தான் இனி Game, Application என எந்த தொல்லையும் இல்லாமல் பேஸ்புக்கில் உங்கள் வேலையை பார்க்கலாம்.
பின் குறிப்பு: இதே பக்கத்தில் நீங்கள் Event Invite அனுப்பும் நபர்களை கூட Block செய்யலாம். "Block event invites" என்ற பகுதியில் அதை செய்யலாம்.
No comments:
Post a Comment