விண்டோஸ் XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா? - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 27, 2013

விண்டோஸ் XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா?



விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில் முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு ஆப்பரேட்டிங்சிஸ்டத்திற்கு மாறாமல், எக்ஸ்பி சிஸ்டத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா?

கீழே தரப்பட்டுள்ள தகவல்களையும், டிப்ஸ்களையும் கவனமாகப் படிக்கவும். பலர் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கட்டணம் செலுத்தி புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்குவதனைத் தள்ளிப்போடலாமே என்ற எண்ணமே முக்கிய காரணம்.

ஆனால் சில உண்மைகளை நாம் எடுத்துக் கொண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி 2001ல் வெளியானது. அடுத்து 12 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஒரு டஜன் ஆண்டில், ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் புதிய சிஸ்டத்திற்கு, புதிய கணனிக்கு மாறி இருக்க வேண்டும்.

பண அடிப்படையில் பார்த்தால் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் நான்கு மாற்றங்களுக்கு முன்னால் இருந்ததனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரியும். இது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதது. பிரச்னை ஏற்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கான செலவு, புதிய சிஸ்டம் மற்றும் கணனிக்கு மாறுவதைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்.

இணையவெளியில் உலாவும் திருடர்கள், எக்ஸ்பிக்கு தொடர்ந்து குறி வைத்துக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம், இன்னும் பலர் இதனையே பயன்படுத்தி வருவதே.

மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தப்படும் பட்சத்தில், பாதுகாப்பு எதுவும் இல்லாத ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் எக்ஸ்பி மாறிவிடும். உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருட ஒரு சிறிய இமெயில் கூட போதும் என்ற நிலை உருவாகும்.

மைக்ரோசாப்ட், இன்னும் ஓராண்டில், எக்ஸ்பி சிஸ்டத்தின் இயக்கத்திற்கு அப்டேட் எதனையும் தராது என்பது உறுதி. எனவே பயனாளர்களுக்கு எக்ஸ்பி அவர்களின் பிடியில் இருக்காது. என்ன விளைவு ஏற்பட்டாலும் அவர்கள் மட்டுமே அதனைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

பழைய கணனிகளில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்து இயக்கினாலும், அதில் இயங்கும் புரோகிராம்களுக்கு முழுமையான செயல்பாடு கிடைக்காது.

உங்கள் நிறுவனத்தில் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்த உங்கள் அலுவலர்களைக் கட்டாயப்படுத்தினால், தாமதமான வேலைப்பாட்டிற்கு நீங்களே வழி வகுத்து நிறுவனத்தின் நேரம் மற்றும் உழைப்பு இழப்பிற்கு வழி வகுக்கிறீர்கள்.

பழைய குதிரையை என்ன தட்டினாலும், அதனால் முடிந்தால்தானே ஓடும். குதிரை மீது அமர்வதற்கு புதிய சீட் வாங்கிக் கொடுத்தாலும், குதிரை பழையதாக இருந்தால், அதனால் இயன்றவரை தானே ஓடும்.

இன்னொரு வழியில் இதனைப் பார்க்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை நல்ல முறையில் பராமரித்தால் நீங்களே ஒரு மெக்கானிக்காக இருந்தால், தொடர்ந்து ஓட்ட முடியும். ஆனால், எண்ணிப் பாருங்கள்.

அதே போல் தான் விண்டோஸ் எக்ஸ்பியை இன்றைய சூழ்நிலையில் இயக்குவது. விண்டோஸ் எக்ஸ்பி உருவாகி வெளியான காலத்தில், கணனியின் இயங்கும் திறன் மற்றும் தன்மைக்கேற்ப எக்ஸ்பி உருவாக்கப் பட்டது. 640 பிக்ஸெல்கள் கொண்ட திரை அகலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6க்கென உருவானது. தற்போது அது இயங்கவே முடியாது என்று கைவிடப்பட்ட ஒரு பிரவுசராகும். ஆனால், அதனை இயக்க உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நாம் இன்னும் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.

விண்டோஸ் எக்ஸ்பி வெளியான போது, யு.எஸ்.பி.2 சப்போர்ட் செய்யப்படவில்லை. ராம் மெமரியின் அளவு மிகக் குறைவே. 137 ஜிபி அளவிலான ஹார்ட் டிஸ்க் தான், அதிக பட்ச அளவாக இருந்தது. இப்போது தொடக்க நிலையே 500 ஜி.பி. ஆக தற்போது உள்ளது.

எக்ஸ்பி பயன்படுத்தும் சிலர், தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8ல் இயங்காது என்று எண்ணுகின்றனர். எனவே தான் எக்ஸ்பி மட்டும் எங்களுக்குப் போதும் என்கின்றனர். இதை நீங்களாக முடிவு செய்யாதீர்கள்.

கீழே உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் சென்று கண்டறியுங்கள். “சரி வராது” என்று பதில் வந்தால், புதிய சிஸ்டத்திற்கு ஏற்ற வகையில் அப்ளிகேஷன் புரோகிராமினை மாற்றுங்கள்.

சரியாக இயங்காது என்று நீங்கள் எண்ணும் புரோகிராம்கள், அண்மைக் காலத்திய இயக்க முறைகளுக்கு ஏற்றவகையில் மாற்றப் பட்டிருக்கும். நீங்கள் அப்டேட் செய்திடாமல் அதனைக் குற்றம் சொல்லிப் பலனில்லை.

புதிய பதிப்பிற்கு மாறினால் கூடுதல் வசதிகள் கிடைக்கலாம். உங்கள் அலுவலகம் மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளுக்கு இதனால் அதிக லாபம் வரலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி வந்த காலத்தில் மடிக்கணனிகள் ஆடம்பரமான கம்ப்யூட்டிங் முறையின் ஓர் அடையாளமாகக் கருதப்பட்டது. ஸ்மார்ட் போன்கள் என்பவை பற்றி யாரும் எண்ணிக் கூடப் பார்த்திராத காலம். ஐபேட் போன்ற சாதனங்கள் எல்லாம், விஞ்ஞானக் கற்பனைக் கதைகளில் மட்டுமே மிதந்தன.

யு ட்யூப், ஸ்கை ட்ரைவ், ஜிமெயில், மை ஸ்பேஸ் என்பவை எல்லாம் அப்போது இல்லை. பயர்பாக்ஸ், உபுண்டு லினக்ஸ், ஐபாட் என்பவை எல்லாம் கேட்காத பெயர் களாகும். ஐபோனுக்கு ஐந்தாம் நிலையில் அப்டேட் செய்திடும் போது ஐபோன் வராத காலத்தில் இருந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவையா என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எக்ஸ்பி சிஸ்டம், கணனியை இயக்கும் சாதாரண மனிதனின் தேவைகளுக்கேற்ப எளிமையாக கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டது.

தற்போது அந்த மனிதனின் வாழ்க்கை முறை எல்லாம் மாறிவிட்டது. அப்போது கணனி வழியாக இணையதளம் கிடைத்ததா? அனைத்து பண பரிமாற்றமும் நடந்தேறியதா? ஆனால், தற்போது மேற்கொள்கிறோம். அதனால், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதற்கு புதிய சிஸ்டம் வேண்டும்.

பாதுகாப்பு என்ற கோணத்தில், விண்டோஸ் எக்ஸ்பிக்கென அளிக்கப்பட்ட சர்வீஸ் பேக் புரோகிராம்கள், அதன் வலிமையை இழந்துவிட்டன. விண்டோஸ் 7, எக்ஸ்பி சிஸ்டத்தின் பாதுகாப்பினைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக பாதுகாப்பானதாக உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பினைத் தருகிறது.

விண்டோஸ் எக்ஸ்பி எனக்கு கை வந்த சிஸ்டமாகி விட்டது என்று பாட்டி கதை எல்லாம் சொல்ல வேண்டாம். கை வந்த சிஸ்டம், உங்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்று உணர்ந்து கொள்ளுங்கள். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் இன்னும் எளிமையாகக் கை வந்த கலையாக உங்களிடம் ஒட்டிக் கொள்ளும்.

எனவே, விண்டோஸ் 9 வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போடாமல், எக்ஸ்பிக்கு டாட்டா சொல்லி, உயர்நிலை தொழில்நுட்பத்திற்கு மாறவும்.

கணனியையும் அதற்கேற்றார்போல் மாற்றவும். பத்து ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பதே ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வேடிக்கையான அனுபவம் ஆகும். முன்பே இது மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

1 comment:

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot