கனவுகளை முன்கூட்டியே எதிர்வு கூறக் கூடிய கணனிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மூளையின் அதிர்வலை செயற்பாட்டின் அடிப்படையில், நாம் காணக்கூடிய கனவுகள் பற்றியத் தரவுகளை கணனிகள் எதிர்வு கூறும் வகையில் இவை உருவமைக்கப்பட்டுள்ளன.
மனிதர்களின் மூளைச் செயற்பாட்டை அளவீடு செய்வதன் மூலம், கனவுகள் தொடர்பில் எதிர்வு கூற முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.
கணனிகளின் உதவியுடன் மனிதர்களின் கனவுகள் தொடர்பில் எதிர்காலத்தில் பல்வேறு தரவுகளை வெளியிட முடியும் என பிறவுன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் மசாகோ தமாக்கீ தெரிவித்துள்ளார்.
மூளையின் அதிர்வலைகளை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களின் எண்ண ஓட்டத்தை கண்டறிய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதியக் கணனியின் ஊடாக மனிதர்கள் காணப் போகும் கனவின் உத்தேச படங்களை வரைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment