முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
QWERTY கீபோர்ட்டுடன் கூடியதாகக் காணப்படும் இக்கைப்பேசியானது 3.1 அங்குல அளவு, 720 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் BlackBerry 10.1 இயங்குதளத்தில் செயற்படக் கூடியவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 1.2GHz வேகத்தில் செயலாற்றக் கூடிய Processor மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பனவும் இணைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment