எச்சரிக்கை! ஸ்கைப் இல் கிளம்பும் புது பயங்கரம்! அவதானமாக இருங்கள் உங்கள் நண்பருக்கும் தெரியப்படுத்துங்கள்
வெளிநாட்டில் அல்லது தூரட்தில் உள்ள உறவுகளை முகம்பார்த்து நெருங்கவைப்பது ஸ்கைப்.
பாட்டிகள் கூட, வெளிநாட்டில் உள்ள தங்கள் பேரப்பிள்ளைகளுடன் கதைப்பதற்கு “அடி பிள்ள, அந்த கைப்ப ஒருக்கா போடுடி” என்று சொல்லுமளவுக்கு அது பிரபலமாகிவிட்டது.
ஆனால் அதில் தற்பொழுது ஒரு பயங்கரம் கிளம்பியுள்ளது.
ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ். ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் உங்கள் கணிப்பொறியை என்னென்ன செய்யும் என்பதை கீழே பாருங்கள் சற்று அதிர்ந்தே போய்விடுவீர்கள்
இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் contact முகவரி எளிதாக அவர்களைச் சென்றடையும்.
இதில் ஏதேனும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம், கம்ப்யூட்டரில் வந்து விடும்.
பின்னர் இந்த புரோகிராம், கம்ப்யூட்டரில் தரப்படும் பெர்சனல் தகவல்களை, இணையம் மற்றும் வங்கி அக்கவுண்ட்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை, தொலைவில் உள்ள இன்னொரு சர்வருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது.
அதனை இயக்குபவர், அங்கிருந்தே, உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் புரோகிராம் செயல்படும்.
இதனைத் தவிர்க்க, ஸ்கைப் contact முகவரியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் இன்ஸ்டண்ட் மெசேஜில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடக் கூடாது.
enna koduma sriiiiiiiiiiiii
ReplyDelete