அமெரிக்காவின் மார்க் சக்கர்பர்க் என்பவர் தன்னுடைய ஹார்வார்ட் பல்கலைக்கழக நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக முகப்புத்தகத்தை உருவாக்கினார்.
தற்போது இந்த இணையதளம் 5.1 பில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட புகழ் வாய்ந்த ஒரு சேவை நிறுவனமாக விளங்குகின்றது. இதில் அனைத்து தகவல் தொழில்நுட்ப சேவைகளையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் ஒரு புதிய கைப்பேசியை அந்த நிறுவனம் தற்பொழுது வெளியிடவுள்ளது.
மேலும் ஒரு புதிய முயற்சியாக இணையதளத் தகவலில் தொடர்பு இல்லாத நபர்களுக்கோ, பிரபலங்களுக்கோ செய்தி அனுப்ப விரும்பினால் முகப்புத்தகம் மூலம் கட்டண சேவையில் அந்தத் தகவலை அனுப்பும் புதிய முறையையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இச்சோதனை அடிப்படையில், முதலில் 40 நாடுகளில் உள்ள முகப்புத்தகம் உபயோகிப்பாளர்களுக்கு இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான கட்டணம், செய்தி பெறும் நபரின் முக்கியத்துவம், பிரபலத்தன்மை மற்றும் அவருக்கு பெறப்படும் செய்திகளின் எண்ணிக்கையைப் பொருத்து அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இம்முறையினால், இணையதளத்தில் அன்னியர்கள் ஊடுருவுவது நீங்கும் என்றும் இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment