“உளவுத்துறைக்கு தகவல் தரவேண்டும்” : கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு! ! ! !
கூகுள் இணையதளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறித்து அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ (F.B.I.) கேட்கும் தகவல்களை அந்த நிறுவனம் தரவேண்டும் என்று சான் ஃப்ரான்சிஸ்கோ (San Francisco) மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணையதள சேவை வழங்குவோர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளிடம் தகவல்களை கேட்பதுஅரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூகுள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, அந்நாட்டு உளவுத்துறையின் தீவிரவாதத் தடுப்பு அதிகாரிகள் நீதிபதியின்ஒப்புதல் இல்லாமலேயே உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. இதன் அடிப்படையில், கூகுள் நிறுவனத்திற்கு எஃப்.பி.ஐ (F.B.I.) உத்தரவுகளை பிறப்பித்தது சரிதான் என்று சான் ஃப்ரான்சிஸ்கோ (San Francisco) மாவட்ட நீதிபதி சூசன் இல்ஸ்டான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இத்தீர்ப்பை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment