சிலர் எப்போது பார்த்தாலும் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் செல்போல் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு. எம்மில் அநேகம் பேர் காலையில் எழுவதற்காக தங்களது செல்போனில் அலாரம் வைத்து விட்டு தான் துங்குவார்கள். ஆனால் இந்த செயல் தவறானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
எம்.ஐ.டி மாணவர்கள் நடத்திய ஆய்வில் செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுக்கும் மனிதர்களின் உறக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கதிர்வீச்சுக்கள் மனிதர்களின் உறக்கத்தை பாதிப்பதோடு, மன அழுத்தத்திற்கும் உள்ளாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாள் முழுவதும் உழைத்து களைத்த உடல் ஓய்வெடுப்பது உறக்கத்தின் போதுதான். ஆழ்ந்த அமைதியான உறக்கம்தான் மனிதர்களை இளமையாக வைத்திருக்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் படுக்கை அறையில் டி.வி, கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கக் கூடாது. உறங்கப் போகும்போது அவற்றின் இணைப்ப துண்டிக்கவேண்டும். Off செய்ய மறந்து தூங்கிவிட்டால் கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்றவைகளில் இருந்து வெளியேறும் காந்த அலைகள் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.
எனவே செல்போனை தலையணை அருகில் வைத்து தூங்கக்கூடாது. 3, 4 அடி துரத்துக்கு தள்ளி வைக்கவேண்டும். அருகில் வைத்தோம் என்றால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிப்பதுடன் மட்டுமில்லாது , தலையிடி, மன அழுத்தத்திற்கும் உட்படுத்தும்.
No comments:
Post a Comment