ஜிமெயில் DATA விற்கு உயில் எழுதலாம்! - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Monday, June 3, 2013

ஜிமெயில் DATA விற்கு உயில் எழுதலாம்!


ஜிமெயில் தளத்தில் நாம் பத்திரமாகப் பாதுகாக்க விரும்பும் பல டேட்டா பைல் களைப் பதிந்து வைக்கிறோம். திடீரென நமக்கு மரணம் சம்பவித்தால், இவற்றை எப்படி மற்றவர்கள் பெறுவார்கள். இதனைக் கணக்கிட்டு, கூகுள் ஓர் ஏற்பாடு செய்துள்ளது. உங்களுக்கு மரணம் நேரிட்டால் என்று நேரடியாகக் கூறாமல், உங்கள் மெயில் அக்கவுண்ட் குறிப்பிட்ட மாதங்களுக்கு, எந்த விதமான செயல்பாடும் இல்லாமல் இருந்தால் எந்தவித நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என கூகுள் மெயில் தளத்தில் செட் செய்திட, வசதி தரப்பட்டுள்ளது. 

இந்த புதிய வசதி ‘Inactive Account Manager’ என்று அழைக்கப்படுகிறது. 

நம் கூகுள் அக்கவுண்ட் தளத்தில், நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் வசதியாகும். கூகுள் தளத்துடனான நம் செயல்பாடு தொடர்ந்து குறிப்பிட்ட மாதங்களுக்கு இல்லா மல் போனால் மட்டுமே இது செயல் படுத்தப்படும். மூன்று, ஆறு, ஒன்பது அல்லது பன்னிரண்டு மாதங்கள் செயல் இல்லாமல் போனால், இந்த வசதியைச் செயல்படுத்துமாறு கூகுள் தளத்திற்கு நாம் செட் செய்து அறிவிக்கலாம். மரணம் மட்டுமல்ல, ஒன்றுமே செயல்பட முடியாமல் நாம் மோசமான உடல் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், அல்லது பல மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றுச் சென்றாலும், இந்த வசதி செயல்படுத்தப்படும். இன்டர்நெட் இணைப்பே இல்லாத சூழ்நிலை உள்ள நாட்டிற்குச் சென்று, அங்கிருந்து கூகுள் தளம் தரும் வசதி எதனையும் பயன்படுத்தாமல் இருந்தாலும் இந்த வசதி செயல்படத் தொடங்கும். 

இதற்கான செட்டிங்ஸ் பக்கத்தில், நீங்கள் விரும்பினால், பத்து பேரின் பெயர்களையும், அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளையும் பதிந்து வைக்கலாம். செயல்பட இயலாத காலம் கடந்தவுடன், இவ்வாறு பதிந்து வைப்பவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு செய்தி ஒன்று உங்கள் அக்கவுண்ட் குறித்து அனுப்பப்படும். எந்த யூசர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் மூலம், உங்கள் அக்கவுண்ட்டினை அணுகலாம் என்று காட்டப்படும். 

இவ்வாறு நம் வாரிசாக நியமிக்கும் நபர் களுக்கான மின்னஞ்சல் முகவரி மட்டுமின்றி, தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்த வேண்டும். கூகுள் இந்த எண் உள்ள தொலைபேசிக்கு சோதனை செய்திடும் குறியீட்டு எண்ணை அனுப்பும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் சேர்த்துள்ள டேட்டாவினை ஒரு கோப்பாக, இவ்வாறு நியமிப்பவர்களுக்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பும் வசதியினையும் கூகுள் தருகிறது. பாதுகாப்பிற்காகவும், உங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும், உங்கள் போனுக்கும் ஒரு செய்தி அனுப்பப்படும். ஜிமெயில் அல்லாத மற்ற மின் அஞ்சல் முகவரிக்கும் செய்தி அனுப்பப்படும். இந்த செய்தி, நீங்கள் வரையறை செய்திடும் காலம் முடிய, ஒரு மாதம் இருக்கையில் அனுப்பப் படும். இதன் மூலம் நாம்,பிரச்னை எதுவும் இல்லாமல் இருந்தால், நம் ஜிமெயில் அக்கவுண்ட்டை தொடர்ந்து உயிருடன் வைத் திருக்கும் வகையில் லாக் இன் செய்திடுவோம். இல்லையேல், ஒரு மாதம் கழித்து, நாம் நியமனம் செய்தவர்களுக்கு, கூகுள் தகவல் அனுப்பும்.

இந்த வசதி, கூகுள் தரும் பத்துவித சேவைகளில்(கூகுள் வாய்ஸ், மெயில், யு ட்யூப் போன்றவை) தரப்படுகிறது. இவை ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட முறையில் இந்த சேவையினை, வெவ்வேறு கால வரையறையுடன் செட் செய்திடலாம்.


- தினமலர்

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot