இன்டெல் 4-ஆம் தலைமுறை ப்ராசசர்கள் அறிமுகமானது! - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Friday, June 28, 2013

இன்டெல் 4-ஆம் தலைமுறை ப்ராசசர்கள் அறிமுகமானது!


இன்டெல் நிறுவனம் கணினியின் ப்ராசசர்கலுக்கு பெயர் பெற்ற ஒன்று. பல கணினி நிறுவனங்களுக்கும் இன்டெல் ப்ராசசர்களை உள்ளடக்கி கணினிகளை வெளியிட்டு வருகின்றன. நேற்று இன்டெல் நிறுவனம் டெல்லியில் தனது புதிய 4-ஆம் தலைமுறை ப்ராசசர்களை அறிமுகம் செய்தது. இன்டெல் நிறுவனம் இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது. முந்தைய தலைமுறை ப்ராசசர்களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பசம்சங்கள்: 

  • கணினி மற்றும் Tablet என இரண்டாகவும் இயங்கும் வசதி
  • பழைய மடிக்கணினிகளை* விட 50% அதிக Battery Life (படங்கள் – Upto 11.2 hrs, வேலைகள் – upto 10.3 hrs)
  • ஆன் செய்த 3 நொடிகளில் கணினி இயங்க ஆரம்பித்துவிடும்.
  • Gaming Experience பழைய கணினிகளை* 20 மடங்கு சிறப்பானதாக இருக்கும்.
  • பழைய கணினிகளை* விட நான்கு மடங்கு அதிக வேகம்.
  • 20 நிமிட HD Video – களை 1 நிமிடத்தில் Convert செய்யும் வசதி.
  • Voice Recognition, Immersive Touch, Face Login and Wireless Display To TVபோன்ற வசதிகளும் உள்ளன.
  • Dell, Acer, Lenovo, HP உள்ளிட்ட பிரபலமான கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த 4ம் தலைமுறை இன்டெல் ப்ராசசர்களுடன் கணினி, மடிக்கணினிகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

* பழைய கணினி – நான்கு வருடம் பழையது

1 comment:

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot