WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..! - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 17, 2013

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!


கம்பியில்லா இணைய இணைப்பை சாத்தியமாக்கி WiFi தொழில்நுட்பத்தில் உள்ள அபாயங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அதற்கு முன்பு வைஃபை (WiFi) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். 

WiFi என்பது wireless fidelity என்பதின் சுருக்கம். இது ஒரு wireless local area network ஆகும். கணினி - இணையதள இணைப்புகளுக்கும், நெட்வொர்க்குகளுக்கும் இணைப்புகளை ஏற்படுத்திய கம்பிவட தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக வளர்ந்துள்ள புதிய பரிணாம வளர்ச்சியே வைஃபை என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இணைய இணைப்பு தொழில்நுட்பம் ஆகும். 

வைஃபை நெட்வொர்க்கில் உள்ள குறைகள்: 
(Imperfections in the WiFi network:)

Wi-Fi நுட்பத்தின் மூலம் கணினி, மொபைல், டேப்ளட் பிசி போன்ற சாதனங்களில் இணைய இணைப்பு எந்த இடத்திலிருந்தும் பெற முடியும் என்றாலும் முறையான தடுப்பு, பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்தாத பொழுது இது பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. 

அதாவது, இணைய இணைப்பை வான்வழி சிக்னல்களாக அனுப்பி பெற்றுப் பயன்படுத்துவதால் இடையில் வேறு யாரேனும் அதில் குறுக்கிட்டுப் பயன்படுத்த சாத்தியங்கள் அதிகம். இதன் மூலம் கணினி ஹேக்கர்கள் எளிதாக ஒரு கணினியின் நெட்வொர்க்கில் புகுந்து நாச வேலைகளில் ஈடுபட முடியும். . 

உதாரணமாக சொல்வதெனில் சமீபத்தில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சும்பவத்தில் ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த மின்னஞ்சலுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அதாவது அமெரிக்காவில் உள்ள ஒருவரின் கணினியின் நெட்வொர்க்கில் புகுந்து ஹேக் செய்து அவருடைய கணினியின் மூலம், அவருடைய மின்னஞ்சலை நாசவேலைக்குப் பயன்படுத்தியிருந்தார்கள் என்பது தெரிய வந்தது. தொடர்பில்லாத ஒரு நபரின் கணினியின் மூலம் அந்த நாசவேலை அரங்கேறியிருப்பது தெரிய வந்தது. 

வயர்லெஸ் அக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப்டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லஸ் இணைப்பைப் பயன்படுத்துபவர்கள் வான்வழியே தகவல்களை அனுப்புவதால் அதனை தடுத்து ஹேக் செய்து சுலபமாகிறது. அத்தகவல்களை யார்வேண்டுமானாலும் பார்க்க முடியும். எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும், எந்த ஒரு நெட்வொர்க்கைப் பயன்படுத்தினாலும் ஹேக் செய்வது சுலபமாகிறது. 

தடுக்கும் வழிகள்: 
(ways to stop Hacking)

வயர்லெஸ் கருவியின் அட்மின் பாஸ்வேர்ட்டை (Wireless admin password)நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டும். அதாவது உங்கள் நெட்வொர்க்கின் பெயர், அல்லது பொதுவான பெயருடன் 12345 என இருக்கும் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றி வேறு புதிய கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும். 

உங்களுடைய வயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்பு குறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். 
பயன்படுத்தும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இணைய இணைப்பு துண்டித்துவிடுவது நல்லது. 

வளாகத்தின் மையப்பகுதியில் ஒயர்லெஸ் அணுகள் இடத்தை வைப்பது நல்லது. சுவர் அல்லது சுவற்றின் மூளைகளில் வைப்பதால் கசிவுகள் ஏற்பட்டு அதன் மூலம் உங்களுடைய இணைய நெட்வொர்க்குகளை பிறர் எளிதாகப் பயன்படுத்த முடியும். 

1 comment:


  1. 〈div align='center'〉〈p〉〈div style='-moz-background-clip: -moz-initial; -moz-background-origin: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; width: 369; text-align: left; border: 1px solid #cccccc; padding: 5px; background: #eeeddf; height:86'〉〈span class='Apple-style-span' style='color: #330099;'〉〈span class='Apple-style-span' style='font-size: x-small;'〉தமிழில் தட்டச்சு செய்ய〈/span〉〈/span〉〈a href='http://bibleuncle.blogspot.com/p/tamileditor.html' target='_blank'〉〈span class='Apple-style-span' style='font-size: x-small;'〉〈span class='Apple-style-span' style='color: red;'〉இங்கே சொடுக்கவும்〈/span〉〈/span〉〈/a〉
    〈span class='Apple-style-span' style='color: #330099;'〉〈span class='Apple-style-span' style='font-size: x-small;'〉தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்〈/span〉〈/span〉〈/div〉〈/p〉〈/div〉 - See more at: http://www.bibleuncle.com/2000/06/tamil-unicode-writter-blogger-hake.html#sthash.RVVUK8T4.dpuf

    ReplyDelete

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot