நண்பர்களே..! ஒரு புகைப்படத்தை எடுப்பது என்பது தற்பொழுது உள்ள தொழிநுட்பத்தில் மிகச் சாதாரணமான விடயமாகிவிட்டது. அதாவது எடுத்த படத்தை ரசனை குறையாமல் வழங்குவதற்கும், சில டச்சப் வேலைகள் (Touch up work) செய்து அதைத் தரமான படமாக (Quality image) மாற்றுவதற்கும் இணையத்தில் நிறைய மென்பொருள்கள் கொட்டிக் கிடக்கின்றன.
அவற்றில் மிக முக்கியமான மென்பொருள் போட்டோஷாப். போட்ஷாப் மூலம் நாம் நினைத்த விளைவுகளை (Photo Effects) படத்திற்கு கொண்டு வர முடியும். அவ்வாறான விளைவுகளைக் கொண்டுவர போட்டோஷாப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் நல்ல கற்பனைத் திறனும், கலைநயமிக்க எண்ணங்களும் சேர்ந்திருக்க வேண்டும்.
நினைத்த விளைவுகளைக் கொண்டு வர போட்டோஷாப் மென்பொருளை முழுமையாக கற்றிருக்கவேண்டும். பல ஆண்டுகள் அனுபவத்திற்கு பிறகே ஒரு தொழிற்முறை கலைஞனாக உருவெடுக்க முடியும். இவ்வளவு சிரமபட்டு, கற்றுத் தேர்ந்த கலையை, ஒரு சில மென்பொருள்கள் அப்படியே செய்து விடுவது வியப்பிலும் வியப்பு. நாம் விரும்பிய போட்டோ எஃபக்ட்களை கொடுத்து நம்முடைய பெரும்பாலான நேரத்தை மிச்சப்படுத்துகிறது அவ்வகையான மென்பொருள். அவ்வாறானதொரு மென்பொருளின் ஒன்றுதான் xnsketch மென்பொருள் ஆகும்.
xnsketch மென்பொருளின் பயன்கள்:
- நினைத்த புகைப்படத்தை இந்த மென்பொருளின் மூலம் அழகிய ஓவியமாக மாற்ற முடியும்.
- அதே படத்தை நல்லதொரு கார்ட்டூனாக மாற்றிப் பயன்படுத்தவும் இம்மென்பொருள் நமக்கு உதவுகிறது.
- மிகச்சிறந்த பயனர் இடைமுகத்தை (user interface) கொண்டுள்ளது. அதனால் பயன்படுத்துவது மிக எளிதாக உள்ளது. ஒரே ஒரு கிளிக்கில் வேண்டிய எஃபக்ட்களைக் கொண்டு வர முடியும்.
- இது ஒரு போர்ட்டபிள் மென்பொருளாக இருப்பதால் கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
- இந்த மென்பொருள் விண்டோஸ் (Windows), மேக்(Mac), லினக்ஸ்(linux) போன்ற அனைத்து வகை கணினி இயங்குதளிங்களில் இயக்க்கஃ கூடிய கட்டமைப்பைப் பெற்றுள்ளதால் அனைவத்து வகையான கணினி பயனர்களும் இதைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
No comments:
Post a Comment