Google இன் சில முக்கிய சேவைகளுக்காக கட்டணமற்ற இணைய சேவையை வழங்கும் Dialog. - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Thursday, April 24, 2014

Google இன் சில முக்கிய சேவைகளுக்காக கட்டணமற்ற இணைய சேவையை வழங்கும் Dialog.


தொழிநுட்ப உலகின் இன்றைய இணைய ஜாம்பவானாக திகழும் Google மற்றும் இலங்கையின் முதற்தர தொலைபேசி வலையமைப்பான Dialog உம் இணைந்து ஒரு உன்னதமான சேவையினை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

Google இன் முக்கிய சேவைகளான Gmail, Google Plus, Google Search ஆகியன இணைய பாவனையாளர்களால் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படும் சேவைகளே 

Dialog ஆனது இந்த சேவைகளுக்காகவே தனது கட்டணமற்ற இணைய சேவையினை வழங்குகிறது.

இதனை நீங்களும் பயன்படுத்த விரும்பின் நீங்கள் Dialog பாவனையாலராகவும் Google இல் ஒரு கணக்கையும் கொண்டிருக்க வேண்டும்.

இதற்காக நீங்கள் http://freezone.dialog.lk/ தளத்தில் சென்று Send a link to your phone என்பதனை சுட்டி உங்கள் தொலைபேசி இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் இதற்கான சுட்டியை உங்கள் கையடக்க தொலைபேசிக்கு பெற்றுக்கொள்ளலாம் அல்லது உங்கள் கையடக்க தொலைபேசியில் இருக்கும் இணைய உலாவி மூலம் g.co/freezone எனும் தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எவ்வளவு நேரமும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடிகின்ற இந்த சேவையை இணையம் செயற்படுத்தப்பட்ட எந்த ஒரு கையடக்க தொலைபேசி மூலமும் பயன்படுத்தலாம்.

என்றாலும் இதற்காக உங்கள் மொபைல் இல் இணைந்தாற் போல் வரும் இணைய உலாவியையே பயன்படுத்த வேண்டும். மூன்றாம் நபர் இணைய உலாவிகளில் இதனை பயன்படுத்த முடியாது.

மேலும் Google Search மூலம் பெறப்படும் முடிவுகளில் முடிவுகளின் பக்கத்திற்கு இலவசமாக செல்ல முடியும் என்றாலும் அப்பக்கத்திலுள்ள வேறு ஒரு சுட்டியில் செல்வோம் எனின் அதற்கான கட்டணம் அறவிடப்படும்.

உதாரணமாக Google இல்,
"ANAS GRAFIX" என தேடும் போது அதற்கான முடிவுகளில் www.anasgrafix.com கிடைக்குமெனின் அந்த தளத்திற்கு எவ்வித கட்டணமும் இன்றி பிரவேசிக்கலாம். என்றாலும் அந்த தளத்தில் இருக்கும் வேறு இணைப்புக்களில் சென்றால் அதற்கான கட்டணம் அறவிடப்படும்.

எது எப்படியோ அன்றாடம் இணையத்தை மொபைல் மூலம் பயன்படுத்தும் இலங்கை இணையப் பாவனையார்களுக்கு இது ஒரு இனிமையான செய்தியாகவே அமையலாம்.




No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot