ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த அப்ளிகேஷனை, உங்களுடைய ஸ்மார்ட் போனில் நிறுவி, அதன் மூலம் தமிழில் உள்ள பழமொழிகள், புதிர்கள், பாடல்கள், விடுகதைகள் போன்றவற்றைப் பெற முடியும்.
பயன்படுத்த எளிதான பயனர் இடைமுகம் இதில் இடம்பெற்றுள்ளது. எளிமையாக, மிக தெளிவாக, பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனை மேன்படுத்தக் கூடிய வழிமுறைகளையும், யோசனைகளையும் நீங்கள் வழங்க முடியும்.
இந்த அப்ளிகேஷனைப் பற்றிய உங்களுடைய கருத்தினையும், யோசனைகளையும் கூறுவதற்கான வசதியும் அதில் அளிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் தமிழில் உள்ள பழமொழிகள், விடுகதைகள், பாடல்களை போன்றவற்றை அறிந்துகொள்ள மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
via தங்கம் பழனி
No comments:
Post a Comment