இலவச மின்னிதழ் மாற்றி மென்பொருள் (Ebook Converter) - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 17, 2012

இலவச மின்னிதழ் மாற்றி மென்பொருள் (Ebook Converter)



மின்னிதழ் என்பது ஆங்கிலத்தில் e-book, ebook, electronic book, digital book என்றவாறு குறிப்பிடப்படுகிறது. சாதாரணமாக சொற்கள், படங்கள் போன்றவற்றால் இருக்கும் புத்தகத்தினை டிஜிட்டல் வடிவில் கணிணி அல்லது அதற்கென இருக்கும் டிஜிட்டல் கருவிகளில் படிக்கலாம். இதைப் படிக்கக்கூடியவாறு இருக்கும் டிஜிட்டல் கருவிகள் Ebook Readers/E-Readers என்று அழைக்கப்படுகின்றன. சிலவகையான மின்னிதழ்களை கணிணியிலும் மொபைல்களிலும் படிக்க இயலும்.

பெரும்பாலான மின்னிதழ்கள் அசல் புத்தகத்தை ஸ்கேன் செய்தே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பல கருவிகளுக்காக மின்னிதழ்கள் பல்வேறான பார்மேட்டுகளில் உருவாக்கப்படுவதால் குறிப்பிட்ட ஒன்றில் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கின்றன. அமேசான் நிறுவனத்தின் Kindle Ebook reader மின்னிதழ் படிப்பான்களில் பிரபலமாக இருக்கிறது. இதற்கான மின்புத்தகங்கள் .azw என்ற பார்மேட்டில் உருவாக்கப்படுகிறது. Sony நிறுவனமும் மின்னிதழ் படிப்பான்களை வழங்கி வருகிறது.
(Amazon Kindle Ebook Reader) 
EPUB / IDPF – இந்த வகையான மின்னிதழ்கள் பிரபலமான அதிகளவு பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இதனை Kobo eReader, Apple's iPhone, iPod Touch and iPad, Barnes and Noble Nook, Sony Reader, BeBook, Bookeen Cybook Gen3, COOL-ER, Adobe Digital Editions, Lexcycle Stanza, BookGlutton, AZARDI, FBReader, Aldiko and WordPlayer on Android, Freda on Windows Mobile and Windows Phone 7 போன்ற பெரும்பாலான கருவிகளில் படிக்கலாம். அமேசானின் கிண்டில் இதனை சப்போர்ட் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Pdb – மற்றொரு பிரபல மின்னிதழ் வடிவமான இதனை iPhone, PalmOS, WebOS, Android, Symbian, BlackBerry, Windows Mobile போன்றவற்றில் பயன்படுத்த இயலும்.

PDF – Portable Document file இந்த வகையான மின்னிதழ்களை அதிகமாக கேள்விப்பட்டிருக்கலாம். இதனை கணிணி மற்றும் சில மொபைல்களும் சப்போர்ட் செய்கின்றன.
இதைப்போல பல வடிவங்களில் மின்னிதழ்கள் இணையத்தில் இருப்பதனால் அவற்றை குறிப்பிட்ட கருவிகளில் படிக்க முடியாமல் சிக்கல் ஏற்படலாம். இதற்காக இருக்கும் ஒரு இலவச மென்பொருள் தான் Hamster Ebook converter.இதன் மூலம் Apple devices, Sony, iRiver, Amazon, Kobo மற்றும் பிற eBook readersகளில் தேவைப்படுகிற பார்மேட்டுக்கு எளிதாகவும் விரைவாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

இதில் குறிப்பிட்ட பார்மேட்டைத் தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான கருவியைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. இதிலேயே மற்ற மின்னிதழ் வடிவங்களிலிருந்து PDF,TXT கோப்பு வகைகளுக்கும் மாற்ற முடியும். இதனை இணையத்திலிருந்தால் மட்டுமே தரவிறக்க முடியும். (Online installer)

தரவிறக்கச்சுட்டி: http://ebook.hamstersoft.com/en/

தகவல் உதவி: http://en.wikipedia.org/wiki/E-book

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot