கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள் - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 17, 2012

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்



இலவசமாக குறுந்தகவல் அனுப்ப இணையத்தில் இருக்கும் ஒரு தளம் தான் Way2sms.com. இதைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்.இந்த தளத்தில் சென்று Signup/Register செய்து கொள்ள வேண்டும். இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பின்னர் உங்கள் கணக்கை உறுதிப்படுத்த மொபைலுக்கு ரகசிய எண் அனுப்புவார்கள். அதைக் கொடுத்தால் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.


பின்னர் இந்த தளத்திலேயே சென்று இந்தியாவில் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக SMS அனுப்பலாம். இத்தளத்தில் அதிகமாக இடம் முழுவதும் நிறைக்கிற மாதிரி விளம்பரங்கள் காணப்படுவதால் உங்களுக்கு எரிச்சலாக இருக்கும். அது மட்டுமின்றி அந்த தளத்தில் நுழையாமலே SMS அனுப்புகிற மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.இதற்காகத் தான் ஒரு இலவச மென்பொருளைப் பயன்படுத்தப் போகிறோம்.

இதைப் பயன்படுத்த நெட் வசதி இருந்தால் போதும். இந்த மென்பொருளை ஓப்பன் செய்து அதில் உங்களுடைய Way2sms கணக்கின் username/ Mobile no மற்றும் Password கொடுத்தால் போதும். கனெக்ட் ஆகிவிடும். பின்னர் நீங்கள் அந்த தளத்திற்கு செல்லாமலே டெஸ்க்டாப்பில் இருந்து கொண்டே யாருக்கு வேண்டுமானலும் இலவசமாக SMS அனுப்பலாம்.


இதில் 140 எழுத்துகளுக்குள் அனுப்பலாம். ஒரே நேரத்தில் பல பேருக்கு அனுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு நம்பரையும் Semicolon(;) போட்டு பயன்படுத்தவும். மேலும் இந்த மென்பொருளிலேயே நண்பர்களின் மொபைல் எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.இதனால் எளிமையாகவும் வேகமாகவும் நண்பர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பலாம்.

தரவிறக்கச்சுட்டி: Download way2sms Desktop client (700 kb only)

இதைப் பயன்படுத்த கணிணியில் மைக்ரோசாப்டின் டாட் நெட் சப்போர்ட் இருக்க வேண்டும். விண்டோஸ் 7 பயன்படுத்துவர்களுக்கு டாட் நெட் வசதி அதிலேயே இருக்கும். முதலில் SMS Client மென்பொருளைத் தரவிறக்கி ஓபன் செய்யுங்கள். மென்பொருள் திறக்காவிட்டால் டாட் நெட் கீழே சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள். Download Microsoft dot net framework 4

1 comment:

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot