BlackBerry இன் கலக்கல் ஆரம்பம்! அப்பிள் யுகத்துக்கு முடிவு கட்டுமா? - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Sunday, February 17, 2013

BlackBerry இன் கலக்கல் ஆரம்பம்! அப்பிள் யுகத்துக்கு முடிவு கட்டுமா?



பிரிட்டன், கனடாவில் கலக்கி வரும் BlackBerry Z10 ஸ்மார்ட்போன், இந்த வகையறாவின் போன்களில் தொழில்நுட்ப மேம்பாட்ட அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக இதனை பயன்படுத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆப்பிள் ஐ-போன், ஆண்ட்ராய்ட் அடிப்படையிலான செல்போன்கள் பிளாக்பெரிக்கு பெரும் சோதனைகளை கொடுத்து வந்தது. ஆனாலும் பிளாக்பெரியின் மெசஞ்சர் சேவைகளை அடித்துக் கொள்ள யாரும் இல்லை என்றே கருதப்படுகிறது. அதுவும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டமுடன் பிளாக்பெரி ஸ்மார் போன் போட்டியில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது.

Z10 பிளாஅக் பெரியின் முக்கிய அம்சங்கள் இதோ:

வன்பொருள் (ஹார்டுவேர்):

1. 4.2 இன்ச் டிஸ்பிளே

2. 1280 க்ஷ் 768 ரிசொல்யூஷன்

3. இன்ச்சிற்கு 365 பிக்சல்கள் கோண்ட திரை அடர்த்தி.

4. டியூயல் கோர், 1.5GHழ் புராசசர், 2ஜிபி RAM

5. 8 மெகா பிக்சல் கேமரா (பின்புறம்), 2 மெகா பிக்சல் முன்புற கேமரா

6. 16ஜிபி ஸ்டோரேஜ், ப்ளூஉடூத், வைஃபை, ஜிபிஎஸ், என் எஃப் சி உள்ளிட்ட இணைப்புத் தெரிவுகள்.

கீ போர்டு:

Z10 விசைப்பலகை (கீ போர்டு) மிகவும் எளிதானது, சாஃப்டானது. முந்தைய போன்களில் இல்லாத அளவிற்கு வார்த்தை கணிப்புகள் வசதி உள்ளது. துல்லியம், எடிட் செய்யவேண்டிய தேவையில்லை.

பிளாக்பெரி ஹப்:

Z10-இல் பிளாக்பெரி ஹப் என்பது மெசேஜிங் மையமாகும். இங்கு தொடர்புப் படுத்துவதற்கான விவரங்கள், உரைகள், உடனடி மெசேஜ்கள், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவை மெசேஜிங் செண்டரின் மையமாகும்.

பிளாக்பெரி பிரவுசர்

Z10-இல் பிரவுசர் மேம்படுத்தப்பட்டுள்ளது, புதிதான கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மொபைல் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட எச்.டி.எம்.எல். இணையதளங்களை எந்த வித தடையும் இல்லாமல் காண வசதி செய்யப்பட்டுள்ளது. மல்டிபிள் பேஜஸ், மற்றும் தனிப்பயன் பிரவுசிங் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று.

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot