விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களில் பூBட்டிங் திரையை மாற்ற.. - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 10, 2013

விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களில் பூBட்டிங் திரையை மாற்ற..

விண்டோஸ் இயங்குதளம் தொடங்கும் போதும் மூடும் போதும் இருப்பியல்பான பூட்டிங் திரையே தோன்றும். இதனை மாற்றம் செய்ய இயங்குதளத்தில் எந்தவொரு வசதியும் இல்லை.
விண்டோஸ் இருப்பியல்பு திரையை மாற்றி நம்முடைய படத்தையோ அல்லது நமக்கு பிடித்தமான படத்தையோ பூட்டிங் திரையில் வைத்து பார்க்க ஆசை இருக்கும். நமக்கு பிடித்தமான படத்தை பூட்டிங் திரையாக வைக்க இரண்டு வழி உண்டு ஒன்று இயங்குதளத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து வைக்க வேண்டும். மற்றொன்று மூன்றாம் தர மென்பொருளின் உதவியுடன் வைக்கலாம்.

இயங்குதளம் மூலமாக பூட்டிங் திரையை மாற்றுதல்
முதலில் வின்கி மற்றும் R பொத்தான்களை ஒரு சேர அழுத்தி தோன்றும் விண்டோவில் regedit என்று உள்ளிட்டு ஒகே செய்யவும். தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி தேர்வு செய்யவும்.
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Authentication\LogonUI\Background

பின் Background என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் வலது புறம் OEMBackground என்பதை டபுள் கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் Value data என்பதில் 1 என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தி ரிஸிஸ்டரி எடிட்டரை மூடி விடவும்.
அடுத்து C:\Windows\System32\oobe எனும் வரிசையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்யவும். நீங்கள் இயங்குதளத்தை எந்த ட்ரைவில் நிறுவியுள்ளீர்களோ அந்த ட்ரைவில் ஒப்பன் செய்யவும். இங்கு C: ட்ரைவில் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.
அடுத்து oobe எனும் கோப்பறையினுள் info எனும் கோப்பறையையும் அதனுள் backgrounds எனும் கோப்பறையையும் உருவாக்கவும்.


அதனுள் நீங்கள் பூட்டிங் திரையில் வைக்க விரும்பிய படத்தை காப்பி செய்யவும். அந்த படத்திற்கு backgroundDefault.jpg என்று பெயரை மாற்றிக்கொள்ளவும். அந்த படமானது .jpg இருக்கும் பட்சத்தில்  256 கே.பி அளவுக்குள் இருத்தல் அவசியம் ஆகும். ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து பாருங்கள் நீங்கள் குறிப்பிட்ட படம் பூட்டிங் திரையாக வந்திருக்கும்.

மென்பொருள் மூலம் பூட்டிங் திரையை மாற்ற
மேலே குறிப்பிட்ட முறையை செய்ய நேரம் போதவில்லை என்போருக்கு எளிதாக இலவச மென்பொருள் உதவியுடன் பூட்டிங் திரையை மாற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் VSLogonScreenCustomizer  அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
அதில் Open Picture File என்னும் பொத்தானை அழுத்தி படத்தினை தேர்வு செய்யவும். பின் Apply எனும் பொத்தானை அழுத்தவும். User image has been set on logon screen successfully என்ற செய்தி வரும்.
தற்போது கணினியை மறுதொடக்கம் செய்து பாருங்கள், நீங்கள் குறிப்பிட்ட படம் பூட்டிங் திரையாக அமர்ந்திருக்கும்.
மூன்றாம் தர மென்பொருளை பயன்படுத்தி எளிதாக பூட்டிங் திரையை மாற்றிக் கொள்ள முடியும். இது விண்டோஸ் விஸ்டாவிற்கும் பொருந்தும்.

8 comments:

  1. ரிஜிஸிடரியில் மாற்றம் செய்தால் மாறவில்லை பழைய படி தான் வருகிறது. இனி மென்பொருள் உதவியுடன் முயற்சி செய்து பார்க்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ரிஜிஸிடரியில் மாற்றம் செய்த பிறகு படம் மாறிவிட்டது

      Delete
  2. ரிஜிஸிடரியில் மாற்றம் செய்த பிறகு படம் மாறிவிட்டது , நன்று

    ReplyDelete
  3. how to change windows8 plz helpme

    ReplyDelete
  4. மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும்

    ReplyDelete

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot