புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வியக்கவைக்கும் ஏ.டி.எம். எந்திரங்கள்
அறிமுகமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள காமன்வெல்த் வங்கி தனது
வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்த இந்த வகையை சேர்ந்த
புதுமையான 40 ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவி இருக்கிறது.
இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம், செக் போன்றவற்றை போட்டால் உடனடியாக அதை நமது வங்கி கணக்கில் சேர்த்து விடும். இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டு முடிவுக்குள் மேலும் 150 ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவப் போவதாக வங்கியின் பொதுமேலாளர் மைக்கேல் சாந்த் கூறினார்.
மேலும் அவர் இதன் செயல்பாடு குறித்து கூறுகையில், `நாணயம், பணம் ஆகியவற்றை எண்ணிப் பார்ப்பதுடன், செக் போன்றவற்றை படித்து பார்த்து அவற்றை உரிய கணக்கில் உடனே சேர்க்கும் திறன் படைத்தது' என்கிறார். அங்குள்ள மற்றொரு தனியார் வங்கியும் இது போன்ற 800 ஏ.டி.எம். எந்திரங்களை இந்த நிதியாண்டு இறுதிக்குள் அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment