கணிணியை பார்மெட் செய்வது எப்படி? - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Saturday, April 20, 2013

கணிணியை பார்மெட் செய்வது எப்படி?


முதலில் உங்கள் கணினியின் சீமோஸ் செட்டப் சென்று உங்கள் கணினியின் boot ஓடரில் சீடி ரொம் இற்கு முதல் priority ஐ கொடுங்கள். பின்னர் சேவ்செய்துவிட்டு exit ஆகுங்கள். உங்கள் கணினியின் ரொம் இல் boot able xp setup cd இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

பின்னர் boot ஆகும் போது CD யிலிருந்து boot ஆக press any key என்று சொல்லும். சொன்னபடியே செய்யுங்கள். பின்னர் அதுவாகவே ஆடி ஓடி ஒரு கட்டத்திற்கு வந்து அவர்களது agreement ஐ ஏற்க F8 ஐ அழுத்த சொல்லும். செய்யுங்கள்.

பின்னர் fresh installation ஐ தெரியுங்கள்.

பின்னர் எந்த ட்ரைவில் நிறுவவுள்ளீர்கள் என்று கேட்கும். தெரிவுசெய்யுங்கள். அதை போர்மட் செய்யப்போகிறீர்களா என்று கேட்கும். அதுவும் இரண்டுவகை QUICK and Full. மற்றது உங்கள் hard disk ன் file type ஐயும் கூடவே தெரியவேண்டி வரும். (FAT 32 or NTFS)

உங்கள் கணினிக்கு வின்டோ 98 போடாதவரை நீங்கள் எதையும் தெரிவுசெய்யலாம். ஆனால் quick format ஆனது சாதாரணமாக அழிப்பது போன்றது. Full format தான் சிறந்தது.

format செய்யும் முன் உங்கள் அந்த ட்ரைவில் உள்ளவற்றை (உங்களுக்கு தேவையான தகவல்களை) பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுங்கள்.

பின் அதுவாகவே format செய்து கோப்புக்களை உங்கள் கணினிக்கு கொப்பி செய்யும்.பின்னர் உங்கள் கணினி தானாகவே restart ஆகும். எதுவும் நீங்கள் செய்யவேண்டாம். (மீண்டும் சீடியிலிருந்து பூட் ஆக கேட்கும். அப்படி செய்யவேண்டாம். நீங்கள் ஒன்றும் செய்யாது விட்டால் அது தானாக xp logo உடன் பூட்டாகிவரும்)

பின்னர் எனக்கு அச்சொட்டாக ஞாபகம் இல்லை. உங்கள் கணினியின் time language போன்றவற்றை தெரிய சொல்லும். ஆநேகமாக மாற்றம் தேவையில்லை. பின்னர் CD KEY கேட்கும். கொடுங்கள்.

அத்துடன் தானாகவே அது நிறுவி முடித்துவிடும். நீங்கள் நினைப்பது போல் பெரியவிடையமாக இருக்காது.

ஆனால் உங்கள் கணினியின் வன்பொருட்களுக்கான செயல் மென்பொருட்களை (driver software) அனைத்தும் இருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக்கொண்டு செயலில் இறங்குங்கள். XP serial number ம் கூட............

1 comment:

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot