இணைய தேடல்களில் முக்கிய பங்குவகிக்கும் உலாவிகளில் பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு இரண்டாம் இடத்தில் திகழும் Firefox உலாவியின் புதிய பதிப்பான Firefox 20.0 வெளியிடப்பட்டுள்ளது.இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் புதிய Download Manager மற்றும் Privacy Browsing எனும் இரு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதில் Privacy Browsing எனும் அம்சத்தின் ஊடாக பயனர் ஒருவர் Browsing History, Passwords, Cookies போன்ற தகவல்களை உலாவியில் சேமிப்பதை தவிர்த்து பாதுகாப்பான உலாவலில் ஈடுபடக்கூடியதாகக் காணப்படுகின்றது.
மேலும் புதிய Download Manager அம்சத்தின் ஊடாக முன்னைதை விடவும் விரைவான தரவிறக்கத்தினை மேற்கொள்ள முடிவதுடன் புதிய விண்டோவில் தரவிறக்கம் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.
தரவிறக்கச் சுட்டி > Windows, Mac, Linux
No comments:
Post a Comment