கூகிள் கண்ணாடி. (Google Glass) - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 2, 2013

கூகிள் கண்ணாடி. (Google Glass)


'புதியன புகுதலும் பழையன கழிதலும்' என்ற வரிகளுக்கிணங்க நீண்ட நாட்கள் ஆராய்ச்சிக்குப் பின்  கூகிள் நிறுவனம் தற்போது  அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பக் கருவிதான் கூகிள் கண்ணாடி...



அப்படி என்ன இதில் உள்ளது?
கூகிள் கண்ணாடி என்பது ஒரு அணியக்கூடிய கணணி வகையைச்சேர்ந்தது ஆகும். அதாவது இந்த சிறிய வகை கணணிகள் உடைகளின் மேல் அணியக்குடியது. மிகவும் சிக்கல்தன்மை வாய்ந்த கணிப்புக்கள் தேவைப்படும் இடங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் இதனை நாளாந்த வாழ்வில் பல தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.
சாதாரண கண்ணாடி போன்றே இருக்கும் இந்த கூகிள் கண்ணாடியில காணப்படும் திரை ஸ்மார்ட் போன்களில் இருக்கும் திரையினை போன்றதாகும்.
கண்ணாடியின் முன்னால் இருக்கும் கமரா மூலம் புகைப்படம் எடுக்கவோ அல்லது வீடியோ ஒன்றை பதிவு செய்யவோ முடியும். பின்னர் அதனை நீங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
கூகிள் பிளஸ் ஹங் அவுட் மூலம் வீடியோ கலந்துரையாடல் தனிநபருடனோ அல்லது குழுவுடனோ செய்யலாம். இவை அனைத்தும் நடைபெறுவதற்கான கட்டளையை எமது வாய் வழியூடாக(Voice command)  கொடுக்க முடியும்.
Wi-Fi  இணைய வசதிகொண்ட கூகிள் கண்ணாடி புளூடூத்(Blutooth), அன்ட்ரோயிட்(Android), ஐஃபோன்(iphone) மூலமாக தொடர்புபடுத்த முடியும். 3G மற்றும் 4G இணைய இணைப்புக்களுடன் தொழிற்படக்கூடியது. 
இதனுடைய GPS தொழில்நுட்பம் மூலம் நாம் இருக்கும் இடத்தின் தரவுகளை தருவதுடன் இன்னும் தேவையான விபரங்களை இணைய தேடல் மூலம் நொடிப்பொழுதில் பெற்றுத்தரும்.



இதில் இருக்கும் சில வசதிகளை பார்ப்போம்.

  1. அழகான இயற்கை காட்சியொன்றை இரசித்தவண்ணம் இருக்கிறோம் இதனை பகிர்ந்த்து கொள்ளவோ அல்லது ஹங் அவுட் வீடியோ கலந்துரையாடல் செய்யலாம், மற்றும் பகிரலாம்.
  2. ஒரு பாலத்தின் முன்னால் நின்று கொண்டு அதனுடைய நீள அகலத்தை அறிய முடியும். இலகுவான வாய் வழிக்கட்டளை ஒன்றை பிறப்பித்ததும் கண்ணாடி திரையில் அத்தரவுகள் காணப்படும்.
  3. விமானம் மூலமாக பயணித்து இன்னுமோர் நாட்டு விமான நிலையத்தில் நிற்கும்போது விமான நிலையத்தின் பெயர், நேரம், விமானம் புறப்படும் நேரம் போன்றவற்றை திரையில் பெறமுடியும்.
  4. ஒரு இடத்திக்கு செல்லும்போது அதன் பாதை அருகில் உள்ள முக்கிய இடங்கள் என்பவற்றை கூகிள் மப்ஸ் உதவியுடன் பெற்றுக்கொள்ள முடிகிறது.
  5. உங்களுக்கு தெரியாத பிற மொழியில் எழுதப்பட்ட விடயத்தை இலகுவாக மொழிபெயர்த்து தரும்.

சில வாய் வழி கட்டளைகள்(Voice Commands) செய்யும் முறை.
  • புகைப்படம் எடுக்க :ok, glass, take a picture
  • வீடியோ பதிவு செய்ய :ok, glass, record a video
  • மொழிபெயர்க்க :ok, glass, say [நீங்கள் மொழிபெயர்க்க வேண்டிய சொல்] in [நீங்கள் மொழிபெயர்க்க வேண்டிய மொழி].
  • தகவல் அனுப்ப :ok, glass, send [தகவல்] to [அனுப்பவேண்டியவ்ரின் பெயர்]."
  • காலநிலை வியரம் :ok, glass, how is the weather in [உங்கள் இடம்]?
  • கூகிள் தேடல் :ok, glass, google [தேடவேண்டிய விடயம்]

தற்போது இந்த கூகிள் கண்ணாடியினை 1,500 டொலர்களுக்கு(US$1500) பெற முடியும். மேலும் இதற்கான செயலிகளை உருவாக்குவதற்கும்(My Glass apps) கூகிள் அழைப்பு விடுத்துள்ளது. 
இந்த செயலிகள் இயங்குவதற்கு அன்ரோயிட் 4.0.3 அல்லது அதற்கு மேற்பட்ட இயங்குதளம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 


கட்டமைப்பின் விபரங்கள்

  • திரை: உயர் காட்சித்தெளிவுத்தன்மை(High resolution) கொண்டது.
  • கமரா: நிழல்படங்கள் - 5 MP 
                வீடியோ - 720p
  • ஒலி: Bone Conduction Transducer 
  • இணைப்பு: Wifi – 802.11b/g, Bluetooth
  • சேகரிப்பு அளவு: 12 GB அத்துடன் கூகில் கிளவுட் சேரிப்புடன் (Google cloud storage) சேர்த்து மொத்தமாக 16 GB.
  • மின்கலம்: ஒரு முழு நாளுக்கு பயன்படுத்தக்கூடியது. ஆனால் வீடியோ பதிவு அல்லது ஹங் அவுட்டுக்கு அதிக பயன்பாடு தேவை.
  • சார்ஜர்(Charger): Micro USB cable and charger.
  • பொருத்தப்பாடு(Compatibility): எந்தவொரு Bluetooth பயன்பாட்டில் உள்ள ஃபோனிலும் பயன்படுத்த முடியும்.
  • செயலிகளை (MyGlass companion app) பயன்படுத்த அன்ட்ரோய்ட் 4.0.3 அல்லது அதற்கு கூடின பதிப்பு தேவை.

1 comment:

  1. மிக அருமையான கண்டுபிடிப்பு!!!
    கண்டுபிடித்தவருக்கு மிக்க நன்றிகள் உரித்தாகுக!!!

    Fantastic Invention!!! Thanks lot to the Inventor!!!

    ReplyDelete

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot