கணினி அடிப்படைத்தகவல்கள் (Basic information of computer) - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 20, 2013

கணினி அடிப்படைத்தகவல்கள் (Basic information of computer)

கணினி என்பது என்ன?


கணினி என்பது பல எலக்ட்ரானிக் பொருட்களினால் உருவாக்கப்பட்டதாகும். இதில் transistors, capacitors, diodes, resistors இவைகள் அடங்கிய மதர்போர்டு, இவற்றிற்கு மின்சாரத்தை சரியானபடி பகிர்ந்தளிக்கும் SMPS போன்ற சில துணைப்பொருட்களின் தொகுப்பு கணினி. இவ்வாறு பல உறுப்புகளும் இணைந்து உருவானவையே கணினி ஆகும். இவற்றின் மூலம் ஒரு வேலையை தானாகவே, மிக துல்லியமாக செய்து முடிக்கலாம். கணினிகளில் எத்தகை வகை உண்டு? கணினியில் உள்ள உறுப்புகள் என்னென்ன? அவை எப்படி செயல்படுகின்றன? என்பதை தொடர்ந்து வரும் இடுகைகளின் ஊடாக அறிந்துகொள்வோம்.

Operating System:

இந்த இயந்திரத்தை சரியான முறையில் இயங்கச் செய்வதற்கு உதவுபவைதான் ஆபரேட்டிங் சிஸ்டம். கணினியின் மிக அடிப்படையான ஒன்றாகும். இது கணினியில் அமையப்பெற்ற அனைத்து உறுப்புகளையும் ஒன்றிணைத்து இயக்குகின்றது.நாம் Application Software களை பயன்படுத்தும்போது அதனோடு ஒன்றிணைந்து அந்த Application Software இயங்குவதற்கு ஒரு மேடையாக இருந்து அவற்றிற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கிறது. இதன் அமைப்பில் உள்ள கட்டளைகளுக்கு ஏற்ப, கட்டளைகளையும், அறிவுறுதல்களையும் CPU க்கு வழங்குவது Operating System.

கணினிகள் எத்தனை வகை இருக்கிறது?

கணினிகளில் நான்கு வகை கணினிகள் இருக்கிறது. அவை:

1. Personal Computers, 2. Mini Computers, 3. Mainfram Computers, மற்றும் 4. Super computers

1. பர்சனல் கம்ப்யூட்டர்
இதில் Destop, Tower, Laptop, hand Held, Network என்ற வகைகளில் கம்ப்யூட்டர்கள் இருக்கின்றன.

2. மினி கம்ப்யூட்டர்
இது ஒரு டிபார்ட்மெண்ட்இல் பயன்படுத்தவது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான கணினிகளை ஒன்றிணைத்து ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்தி ஒரே நேரத்தில் அக்கணினிகளை இயக்க முடியும்.

3. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்
பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தும் கணினிகள் இவ்வகையைச் சேரும். இவ்வகை கணினிகள் பல ஆயிரம் கணினிக்களை ஒன்றிணைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்படுபடுத்தி ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

4. சூப்பர் கம்ப்யூட்டர்
நாசா போன்ற பெரிய ஆராய்ச்சி நிலையங்களில் பயன்படுத்தப்படுவது. வேகத்தில் அதிவேகமாகவும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரே செகண்டில் செய்யக்கூடியதும் இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஆகும்.
இந்த எலக்ட்ரானிக் இயந்திரத்தை ஆங்கிலத்தில் system unit (உடம்பு) எனவும், அதை இயக்குகிற Operating System -ஐ உயிர் எனவும் கணினி வல்லுநர்கள் அழைக்கிறார்கள். Operating System System இல்லை என்றால் System unit இயங்காது. இவ்வியந்திரத்தினுள் உள்ள உறுப்புகளை Hard Ware எனவும், அதை இயக்குகிற Operating System, அதனுடன் தொடர்புடைய மற்ற Application Software களை மென்பொருள் எனவும் அழைக்கிறோம்.
அதாவது CPU என்றழைக்கப்படுகிற பெட்டியினுள் உள்ள பாகங்கள், கீபோர்ட், மௌஸ், கணினித் திரை ஆகிய அனைத்தையும் Hardware என்கிறோம். அந்த HARDWARE சாதனங்களை கட்டளைகளால் இயக்குகிற கண்ணுக்குத் தெரியாத மென்பொருள்களை Software என்கிறோம்.

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot