கம்ப்யூட்டர்ல சி.டி மாட்டிகிச்சா...?? - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 20, 2013

கம்ப்யூட்டர்ல சி.டி மாட்டிகிச்சா...??


ஒரு ஆர்வத்தில் சி.டி. யை உங்கள் கணினியில் உள்ள DVD Drive--ல் போட்டு அதை இயக்கியிருப்பீர்கள்.

இயக்கம் முடிந்த பிறகு மீண்டும் அதை வெளியே எடுக்க முனையும்பொழுதுதான் உங்களுக்கு சிக்கலே ஆரம்பிக்கும்.. நன்றாக திறந்து மூடிக்கொண்டிருந்த டிரைவ் இப்பொழுது திறக்காமல் உங்கள் பொறுமையைச் சோதிக்கும்..!!

DVD Drive Tray திறக்காமல் இருப்பதற்கான காரணங்கள்:
வழக்கம்போல முழுமுதல் காரணம் தூசிகள்தான். அதனோடு வேறேதேனும் ஒட்டும்பொருட்கள், தலைமுடி, அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கும். அல்லது DVD Drive Tray கதவுப் பகுதி பிளாஸ்டிக்கால் ஆனதால் அதில் ஏதேனும் விரிசல், உடைசல் ஏற்பட்டாலும் இவ்வாறு திறக்காமல் இருக்கலாம்.

இவ்வாறான தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாவீர்கள்... இப்பிரச்னைக்கு எளிய தீர்வுகள் இருக்கின்றன.

தீர்வு 1: 
உங்கள் CD Drive -மூடியின் கீழாக அருகில் பார்த்தால் ஒரு ஊசி நுழையும் அளவிற்கு ஒரு ஓட்டை இருக்கும். நன்றாக உற்றுப் பார்த்தால்தான் தெரியும். ஒரு சிலர் இதை கவனித்திருக்கமாட்டார்கள். (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பகுதி)

அந்த துளையில் ஒரு ஊசியை அல்லது பேப்பர் கிளிப் (paper clip) எடுத்து இலேசாக நுழைத்தால் போதும். உடனடியாக உங்களுடைய சி.டி டிரைவின் டிரே வெளியே வந்துவிடும்.

தீர்வு 2:
உங்கள் கணினியில் மைகம்ப்யூட்டர் ஐகான் மீது கிளிக் செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் அனைத்து டிரைவ்களும் காட்டப்படும். அதில் Devices with removable storage என்ற பிரிவின் கீழ் உங்கள் சி.டி. அடங்கிய ஐகான் (DVD Drive Icon) காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து எஜக்ட் (Eject) என்பதைக் கிளிக் செய்யவும்.

தீர்வு 3:
இந்த வழிமுறை கொஞ்சம் நிதானமாக செய்ய வேண்டிய ஒன்று. முதலில் உங்கள் கணினியில் மின்சாரம் பாய்வதை தடை செய்ய வேண்டும். அதற்கு உங்களுடைய கணினியை shutdown செய்துவிடவும். பிறகு சி.டி. டிரைவின் டிரேவிற்கு அடியில் ஒரு பிளாட் ஸ்குரூ டிரைவை எடுத்து இலேசாக அதனடியில் செலுத்தி, DVD/CD Drive -ன் டிரேயை இலேசாக இழுக்கவும் (வேகமாக பலம்கொண்டு இழுக்கக்கூடாது). இப்பொழுது டிரே வெளியே வந்துவிடும்.

தீர்வு 4: 
இம்மூன்று வழிகளையும் பின்பற்றி DVD Drive கதவு திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? இருக்கவே இருக்கிறார் (Computer Doctor)கம்ப்யூட்டர் வைத்தியர் (பழுது பார்ப்பவர்). அவரிடம் சொல்லி அதனைச் சரிசெய்ய வேண்டியதுதான். ஆம் நண்பர்களே... கணினியைப் பொருத்தவரை தெரியாத செயல்களை நாம் செய்யும்பொழுது மிக கவனமுடன் செய்து பரீசித்துப் பார்க்க வேண்டும். இல்லையெனில் அதற்குரியவர்களிடம் காண்பித்து சரிசெய்வதே சிறந்த முறை.

மேற்கண்ட மூன்று வழிமுறைகளையும் பின்பற்றி DVD Tray திறக்கவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் நான்காவது வழிமுறையான கணினி பழுது பார்ப்பவரை அழைத்துதான் பிரச்னையை சரிசெய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot