டுவிட்டரில் பரவலாக உபயோகப்படுத்தப்படும் 'ஹேஸ்டெக்' (#)முறை விரைவில் பேஸ்புக்கிலும் பாவனைக்கு வரவுள்ளதாக கடந்த சில வருடங்களாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
வெறும் வதந்தியாக கருதப்பட்டு வந்த 'ஹேஸ்டெக்' தொடர்பான செய்தி தற்போது நிஜமாகியுள்ளது.
ஆம், 'ஹேஸ்டெக்' முறை பேஸ்புக்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தனது தளத்திலும் உரையாடல்களை ஊக்குவிக்கும்பொருட்டு இம்முடிவை பேஸ்புக் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ஒரு விடயம் தொடர்பான ஹேஸ்டெக்கினை கிளிக் செய்வதன் ஊடாக அது தொடர்பில் மற்றையோரின் கருத்து என்ன என்பதனை தொடர்பில் அறிந்துகொள்ளமுடியும்.
இதன்மூலம் தனது தளத்தில் பாவனையாளர்களை அதிக நேரம் வைத்திருக்க பேஸ்புக் எதிர்ப்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
டுவிட்டர், தம்ளர், இன்ஸ்ட்ரகிராம் போன்ற வலையமைப்புகளிலும் ஹேஸ்டெக் பாவனையிலுள்ள போதிலும், டுவிட்டரைக் கருத்தில் கொண்டே இதனை பேஸ்புக் தனது வலையமைப்பில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிகின்றது.
கடந்த சில காலங்களாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்கள் போட்டியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.
No comments:
Post a Comment