ஆன்ட்ராய்ட் போன்கள் மற்றும் டேப்லெட்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்ட்ராய்ட் பயனர்கள் நிறைய பேரின் கேள்வி அதில் எப்படி தமிழில் எழுதுவது, எது சிறந்த அப்ளிகேஷன் ?
GOOGLE PLAY'யில் இதற்கு நிறைய அப்ளிகேஷன்கள் இருக்கின்றன என்றாலும் மிகச்சில மட்டுமே தமிழில் எழுதுவதற்கு எளிதாக உள்ளன. இவற்றில் KM Keyboard என்ற அப்ளிகேஷனும் அடங்கும். ஆனால் தற்போது அதை விட எளிதான அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. அவற்றில் மூன்றை இதில் பார்ப்போம்.
1. SELLINAM
தற்போது அநேகர் பயன்படுத்தும் அப்ளிகேஷன் இதுதான். மிக எளிதாக எழுதும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனில் கீபோர்ட் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உள்ளது. தமிழ் மொழி கீபோர்டை பயன்படுத்தி எழுத விரும்பும் நண்பர்களுக்கு உகந்த அப்ளிகேஷன் இது தான். அதற்கான எழுதுவது கடினமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், மிக மிக எளிதாகவே உள்ளது.
இதன் இன்னொரு சிறப்பு தமிழில் எழுதும் அதே நேரத்தில் உடனே ஆங்கிலத்துக்கு மாற இடது கீழ் மூலையில் உள்ள “மு/த” என்பதை கிளிக் செய்தால் போதும். அதே போல தான் தமிழுக்கும். குறிப்பிட்ட வார்த்தையை முடிக்கும் முன்பே Dictionary மூலம் அந்த வார்த்தை Suggestion ஆக வருவதும் ஒரு சிறப்பம்சம்.
2. TAMIL VISAI
செல்லினம் போலவே ஒரு சிறந்த அப்ளிகேஷன் இது. டைப் செய்யும் கீபோர்டு நான்கு வகையாக உள்ளன. ஆனால் இதிலேயே ஆங்கிலத்தில் டைப் செய்யும் வசதியும் உள்ளது. டைப் செய்யும் போது Text தோன்றும் இடம் இரண்டு பகுதிகளாக இருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. Symbol பகுதியில் மிகக் குறைந்த அளவிலான Symbolகளே உள்ளன.
3. UKEYBOARD
செல்லினம் போலவே உள்ள இன்னொரு மாற்று கீபோர்டு இது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தமிழ் மட்டுமின்றி இன்னும் 21 மொழிகளில் எழுதும் வசதி உள்ளது. தமிழில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு குறிப்பாக Google Tamil Transliteration பயன்படுத்தி கணினியில் தமிழில் எழுதுபவர்களுக்கு உகந்த Application இது.
இதிலும் குறிப்பிட்ட வார்த்தையை முடிக்கும் முன்பே Dictionary மூலம் அந்த வார்த்தை Suggestion ஆக வருகிறது. மீண்டும் ஆங்கிலத்தில் எழுத நீங்கள் Input Method -ஐ தான் மாற்ற வேண்டும். இதன் ஒரு குறை சில சமயம் ஆங்கிலத்தில் எழுதுவது தமிழுக்கு மாறுவது இல்லை.
UKeyboard தரவிறக்க - CLICK HERE
மூன்றையும் ஒப்பிடும் போது Sellinam, Tamil Visai இரண்டும் சிறந்த அப்ளிகேஷன் என்று தோன்றுகிறது. நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி இருப்பின் உங்கள் அனுபவத்தை கமெண்ட் மூலம் சொல்லுங்கள்.
ஆம் நான் செல்லினம் தான் பயன் படுத்துகிறேன் சிறப்பாக உள்ளது
ReplyDelete