காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.
’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின் முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி செல்போன்’ ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்’, ’ஃபேஸ்புக்’, ’ட்விட்டர்’ போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக 'வாட்ஸ் ஆப்’(WhatsApp) என்ற உபகரணம் இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எவ்வித செலவுமின்றி, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் அரை நொடிக்குள் அனுப்பி விடலாம் என்பதால், இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் 'வாட்ஸ் ஆப்’ உபகரணத்தை பதிவிறக்கம்(Download) செய்து வைத்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த உபகரணத்தை பயன்படுத்தி பலன் அடைந்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் 'வாட்ஸ் ஆப்’க்கு கூடி வரும் மவுசை கண்டு பலரும் வியந்து வரும் நிலையில், நட்புகளை உருவாக்கிக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வாய்த்த புதிய தூதுவனாக கருதப்படும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் 'வாட்ஸேஎஅப்’ நிறுவனத்தை 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு(ஒரு பில்லியன் என்பது 100 கோடி) வாங்க முன்வந்துள்ளது.
இந்த தொகையில் 4 பில்லியன் டொலர்களை ரொக்கமாகவும், 12 பில்லியன் டொலர்களை பங்குகளாகவும் வழங்க ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையொப்பமாகியுள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment