இன்று உலகில் இணையம் பயன்படுத்தும் பலருக்கு சோஷியல் மீடியாவான பேஸ்புக் அல்லது ட்விட்டர் தளத்தில் நிச்சயம் அக்கவுன்ட் இருக்கும்.
உலகளவில் தங்கள் நண் பர்கள் வட்டத்தை விரிவா க்கி, கருத்துக்க ளையும், தனிநபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக்கொண்டு, தனி நபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்ப டுகின்றனர் .
இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளி த்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித் தால் அது அனைவருக்கும் நலம் அளிக்கும்.
இதோ இவை தான் நண்பரே அந்த அடிப்படை கோட்பாடுகள் பாருங்கள்……
உணர்வு பகிர்தலில் கட்டுப்பாடு.
என்னதான் நம் நண்பர்களுடன் நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டாலும், சிலவற்றை நம் முடனே வைத்துக் கொள்வது தான் நாகரிகமானது. ஒரு சிலர் வேண்டும் என்றே, உண்மைக்கு மாறான தகவல்களை, வெளிப்ப டுத்துகின்றனர்.
நம் உடல்நலக்குறைவு, பாலியல் ரீதியான பிரச்னைகள், மற்றவரை இன்னலுக்குள்ளாக்கும் காதல் பிரச்னைகளை மற்றவர் அறியத் தருவது நம்மைப் பற்றிய அருவருப்பைத் தான் ஏற்படுத்தும். எனவே உங்களை
ப் பற்றிய அனைத்து தகவல்களையும் பிறர் அறியத் தர வே ண்டாமே.
சமூக தளம் உங்கள் பிரச்சார மேடை அல்ல.
இணையத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் சமூகத் தளங்கள், நம் கருத்துக்க ளை வெளிப்படுத்தவும் தரப்பட்டிருக் கும் ஓர் இடம்தான். ஆனால், அத னையே நம் பிரச்சார மேடையாக்கி, எப்போதும் நான் எண்ணுவதே, என் கொள்கைகளே, கருத்துக்களே சரி என்ற அளவில் இயங்கு வது தவறானதாகும்.
உங்கள் ஒழுக்க, அரசியல் கோட்பாடுகளை உங்களுட னே வைத்துக் கொள்ளுங் கள். மற்றவர்கள் அவற் றைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதற்காக உங்க ளைப் பாராட்ட வேண்டு ம் என்ற எண்ணத்துடன் வெளி யிடுவது தவறு.
குற்றச்சாட்டுக்கான மேடையா இது?
சிலர் நுகர்வோர் பிரச்னைகளு க்கான மேடையாக சமூக வலைத் தளங்களைப் பயன்படு த்தி வருகின்றனர். இதுவும் தவ று. ஒன்றிரண்டு பொதுவான பிரச்னைகளை தெரிவிக்கலா ம். ஆனால், தொடர்ந்து ஒருவ ருக்கு அல்லது நிறுவனத் திற்கு எதிரான கருத்துக்களை, அவர் களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடுவது கூடாது.
நீங்கள் என்ன செய்தி ஏஜென்சியா?
இணையத்தில் இப்போது சுடச் சுட செய்திகள் வந்து கொண் டிருக்கின் றன. ஒரு நிகழ்ச்சி நடந்து கொண் டிருக்கையில், அல்லது நடந்து மு டிந்த சில நொடிகளில் அது குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆனா ல், ஒரு சிலர் தங்களுக்குத்தான் முதலில் தெரிந்ததாகக்காட்டிக் கொண்டு அவை பற்றி தகவல்களைத் தெரிவிக்கின்றனர். இதற்கென இருக்கும் நியூஸ் ஏஜென்சிகள் அவற்றைப் பார் த்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் நேரத்தையும், வலைத்த ளங்களின் இடத்தையும் வீண டிக்கிறீர்கள்.
மேற்கோள்கள் தேவையா?
சிலர் ஐன்ஸ்டீன் சொன்னது, ஷேக்ஸ்பியர் நாயகர்கள் கூறி யது என எதனையாவது மேற் கோள் காட்டிக்கொண்டே இரு ப்பார்கள். தொடர்பற்று இருக்கும் இவை தேவையா? நீங்கள் உங்களைப் பெரிய குருவாக எண்ணுவதனை நிறுத்திக் கொ ள்ளலாமே.
வீணான பெருமை வேண்டாமே!
சிலர் தங்கள் நண்பர்கள் வட்டம் மிகப் பெரிது என்பதைக் காட்டுவத ற்காக, தினந்தோறும் தொடர்பற்ற பலருக்கு மெசேஜ் அனுப்புவார்க ள். இதனால் என்ன நேரப் போகிறது. உண்மையிலேயே நீங் கள் பகிர்ந்துகொள்ளக்கூடிய நிலை இருந்தால்மட்டுமே நண் பர்களின் வட்டத்தை விரி தாக்குங்கள். நட்பு வட்டத் தில் உள்ளவர்களிடம் ஆ ரோக்கியமான உறவி னை ப்பலப்படுத்துங்கள்.
உங்களுக்கு தகவல், மற்றவருக்கு குப்பை?
சில தகவல்கள் உங்களுக்கு மட்டுமே தொடர்புடையதாக இருக்கும். மற்றவருக்கு அது கிஞ்சித்தும் பயன்படாததாக இருக்கலாம். அவற்றை அனை வருக்கும் அனுப்புவதனை நி றுத்தவும். ஏனென்றால், சமூக வலைத்தளம் உங்களின் பிரை வேட் டயரி அல்ல.
முகம் சுழிக்கும் படங்கள் தேவையா?
என்ன ஏது என்று பார்க்காமல், சிலர் தாங்கள் ரசிக்கும் பட ங்களைப் பதிக்கின்றனர். மத ரீதியாக சிலர் மனதை அவை புண்படுத்தலாம். நாகரிக அடி ப்படையில் சில ஒத்துக்கொ ள்ளக் கூடாததாக இருக்கலா ம். எனவே தேவையற்ற படங் களை வெளியிட வேண்டா மே. அதேபோல உங்களின் தோழர்கள் மற்றும் தோழியர் களின் படங்களை வெளியிடுவது மிகப் பெருந்தவறல்லவா. அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை பாழ் படுத்த வேண்டாமே.
நன்றி - மரிக்குமார்.
No comments:
Post a Comment