"எந்த மொழியில் பேசினாலும் இனி உங்கள் மொழியில் கேட்கலாம்" : ஸ்கைப் நிறுவனம் தெரிவிப்பு!
ஸ்கைப் பற்றி நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள் எனலாம். உலகம் எங்கும் இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் இலவசமாக வீடியோ கால் செய்ய இது உதவும். சாஃப்ட்வேர் துறையில் முன்னனி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கான சோதனை முயற்சிகள் பிப்ரவரியில் இருந்தே நடைபெற்று வந்து தற்போது டெமோ வெர்ஷன் வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை மைக்ரோசாஃப்ட் சிஇஓ ஆங்கிலத்தில் பேசி எதிர்முனையில் ஜெர்மன் மொழியில் கேட்டு டெமோ வெர்ஷனை துவக்கி வைத்தனர். இனி பேச மொழி ஒரு தடையில்லை என்ற சூழலை மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ளது.
அதாவது ஸ்கைப்பில் நீங்கள் ஒருவருடன் தமிழில் உரையாடினால் அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்றால் Language Mode ல் English என்று அவர் மாற்றினால் போதும். அவருக்கு நீங்கள் பேசும் மொழி ஆங்கிலத்தில்
கிடைக்கும் இந்த ஆண்டுக்குள் இதற்கான அப்டேட் அனைத்து ஸ்கைப் அக்கவுன்ட் யூஸர்ஸூக்கும் கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment