ITExpertTraining (www.itexperttraining.com) என்ற மின் கற்றல் இணையதளமானது 40 மனித ஆண்டு கால கற்பித்தல் அனுபவமிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியானது, தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் தங்கள் வேலையில் நிலைத்திருக்கவும், அதில் முன்னேறி செல்லவும் அல்லது புதிய வேலை வாய்ப்பை தேடவும் தங்களின் துறை சார்ந்த அறிவு மற்றும் ஆற்றலை தொடர்ந்து மேம்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சந்தையில் அதிக தேவையுடையதாக இருக்கும் தொழில்களுக்கு தேவையான உயர்நிலைப் பயிற்சிகள் இந்த இணையதளத்தின் இலத்திரனியல் கற்கை வசதி முறை மூலம் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களால் அளிக்கப்படுகிறது.
ITExpertTraining-இன் பயிற்சியாளர்கள் அனைவரும் நன்கு அனுபவமிகுந்த தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் பணியில் இருக்கும் தொழில்நுட்ப நிபுணர்கள். பயிற்சி வகுப்புகளில், நிபுணர்கள் கற்பித்தலோடு மட்டுமல்லாமல் தங்களின் துறைசார் திறன், அறிவு, மற்றும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம் பயிற்சி பெறுபவர்கள் தங்களின் தொழிற்பாதையில் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேறி செல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை பெறுகின்றனர்.
தகவல் தொழிநுட்பத்துறையில் உயர் நிலை கற்கை நெறிகளுக்குத் தேவையான பெரும்பாலான அடிப்படை பாடங்களும் இங்கு இலவசமாக தரப்படுகின்றன. இலவச தானியங்கு பதிவு மூலம் தன்னைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் உட்பிரவேசித்து இந்த Portal ன் வசதிகளை உபயோகப்படுத்தலாம்.
இதன் மூலம் எமது சமூகம் பயன் அடையும் என எதிர்பார்க்கிறோம். ஏனையோருக்கும் பகிருங்கள்.
www.itexperttraining.com சார்பாக, ஹரீஸ் ஸாலிஹ்.
No comments:
Post a Comment