Kiki Challenge என்றால் என்ன? - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 11, 2018

Kiki Challenge என்றால் என்ன?


 - Isbahan Sharfdeen -

சமூக ஊடகங்களில் காலத்துக்கு காலம் பல்வேறு சமூக சவால்கள் முன்வைக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
'முடிந்தால் இதை செய்து காட்டுங்கள்', 'நான் செய்ததைப் போல நீங்கள் செய்து காட்ட வேண்டும். நான் உங்களைத் தெரிவு செய்து விட்டேன்' போன்ற தோரணைகளில் இப்படியான சவால்கள் முன்வைக்கப்படுகின்றன.
'ஐஸ் பக்கட் செலனஜ்' வந்த போது அது குறித்த ஒரு பதிவை நான் இட்டிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் ஒரு செயல் தான் இந்த 'கிகி செலன்ஜ்'.
Interaction னுக்காக, Fun க்காக என இப்படியான சவால்கள் சமூக ஊடகங்களில் அறிமுகப் படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு விசயத்தின்பால் கவனயீர்ப்பைப் பெறவும், அதற்காக ஆதரவு திரட்டவும், நல்ல விடயத்திற்காக நிதி சேகரிக்கவும் என பல்வேறு நோக்கங்களுக்காகவும் இப்படியான சமூக சவால்களை அறிமுகப்படுத்துவதுவதும் உண்டு.
"கிகி சவால்" என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த செயல் போக்குவரத்து சட்டவிதிகளுக்கு மிகவும் புரம்பான ஒரு நடவடிக்கை ஆகும்.
சட்டத்தை மதிக்கின்ற யாரும் இதில் ஈடுபட மாட்டார்கள். மீறினால் தண்டிப்பதற்கான முழு அதிகாரமும் காவல் துறைக்கு உண்டு என சில நாடுகள் அறிவித்துள்ளன. இந்தியாவில் சில இளைஞர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை வழங்கிய செய்தி தற்போது வைரலாக பரவி வருவதையும் காணலாம்.
'பொறுப்பற்ற ஓட்டுனர்கள்' என்ற வகையில் இப்படியானவர்களை தண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

கனடா ரெப் பாடகரான (Canadian rapper Drake) ட்ராக் என்பர் வெளியிட்ட “In My Feelings” என்ற தனது பாடலைத் தொடர்ந்து இந்த Ki Ki Challenge சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்தது. அப்போது, பயணித்துக்கொண்டிருக்கும் காரில் இருந்து இறங்கி குறித்த பாடலின் முதல் பகுதி கோரஸ் முடிவடையும் வரை பாதையில் ஆட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
அதன்படி, "மை ஃபீலிங்ஸ்" என்ற பாடலைப் பாடி நகரும் காரில் இருந்து வெளியேறி, கார் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் கோரஸின் முதல் பகுதி முடியும் வரை பாதையில் அப் பாடலைப் பாடியபடி நடனமாட வேண்டும் என்பதே இந்த 'கி கி சவால்'.
இது, #MyFeelingschallenge என்ற பெயரிலும் #kikiChallenge என்ற பெயரிலும் இணையத்தில் Trend ஆகி வருகின்றது.
இது மிகவும் ஆபத்தான ஒரு சவால் முறையாகும். தற்போது பலர் இந்த சவாலை செய்யப் போய் பல்வேறு ஆபத்துக்களை முகங் கொடுத்துள்ளார்கள். அப்படி தவறிய பலபேருடைய காணொளிகளும் தற்போது சமூக ஊடக மேடைகளில் வைரலாகி வருகின்றன.

குறித்த பாடலின் கோரஸ் முதல் பகுதி சுமார் 30 விநாடிகள் வரை நீடிக்கிறது, அதாவது இந்த சவாலை 30 வினாடிகள் செய்ய வேண்டும். அதாவது, அந்த குறித்த நேரத்தில் வாகனம் "Neutral" இல் ஒரு ஓட்டுனர் இல்லாமல் விட்டுவிடப்படுகிறது என்பதாகும்.
இது ஒரு விபத்துக்கான போதுமான நேரமாக உள்ளது. 30 செக்கன்கள் எப்படிப் போனாலும் ஒரு நொடிக்குள் விபத்துக்கள் நிகழவும் வாய்ப்பு உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்!
நல்ல நோக்கத்திற்காக வேண்டி என்று இருந்தாலும் அதனை அடைவதற்கான வழிமுறை பிழையாக இருப்பின் அப்படியான ஒரு நோக்கமே தேவையில்லை. உங்களுக்கு ஒரு ஆபத்து, தீமை வருமென்றிருந்தால் அதனை செய்யாதீர்கள்! நேரம் எப்படி இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
கார், வேன், பஸ், ட்ரைன் மற்றும் அம்புயுலன்ஸில் கூட சில இளைஞர்கள் ஏதோ ஒரு உத்வேகத்தில் Social Media Trend ஓடு நாங்களும் இருக்கின்றோம் என்று காட்ட இந்த சவாலில் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கையில் பரவ முன் தெளிவு படுத்தவது எங்களது பொறுப்பாகும்.
இப்படியான சவால்களைச் செய்துதான் Hero ஆகனும் என்ற எந்த அவசியமும் கிடையாது. சமூக ஊடகங்களில் Trend ஆக வலம் வரும் இந்த Ki Ki Challenge விசயத்தில் இளைஞர்கள் புத்தியோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தப் பதிவை இடுகிறேன்.
10.08.2018
www.isbahan.com

6 comments:

 1. We stumbled over here from a different web page andi much it thought
  I might as well check things out.
  Latest jobs

  ReplyDelete
 2. My brother recommended I might like this website. He was entirely right i like it very much.
  This post truly made my day.
  Kumkum Bhagya Episode

  ReplyDelete
 3. It’s remarkable to visit this web site and reading the views of all mates concerning this paragraph i much like this
  Ishq Mein Marjawan Episode

  ReplyDelete
 4. Thank you for sharing
  https://aab-edu.net/

  ReplyDelete
 5. Thank you for sharing
  https://aab-edu.net/

  ReplyDelete
 6. Thank you for sharing
  https://aab-edu.net/

  ReplyDelete

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot