பேஸ்புக் தகவல் திருட்டிலிருந்து நீங்கள் பாதுகாப்பா? - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Monday, October 1, 2018

பேஸ்புக் தகவல் திருட்டிலிருந்து நீங்கள் பாதுகாப்பா?


- ஸஹ்ரான்  கரீம் -

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு பாரிய தகவல் திருட்டு நடந்திருப்பதை நீங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். கிட்டத்தட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் இந்த சதியின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் அதிபர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்திருக்கின்றார். ஃபேஸ்புக்கின் மொத்த கணக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இது ஒரு பாரிய தொகை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை இனங்கண்டு அதன் மூலம் உள்ளே நுழைந்து ஒவ்வொரு கணக்கிலும் உள்ள Access Token களைத் திருடியுள்ளார்கள். Access Token என்பது ஒரு Digital Key போன்றது. இதனை உபயோகித்து உங்களது ஃபேஸ்புக் கணக்குகளில் உள்ளே நுளைந்து சில சதிகளைச் செய்ய முடியும்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

Change Your Password
பாதிக்கப்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் ஒவ்வொன்றிலும் உள்ள அனைத்து Access Tokenகளை மாற்றப்பட்டு விட்டதாக அறிவிக்கின்றது ஃபேஸ்புக் நிறுவனம். ஆகையால் Password ஐ மாற்றத் தேவையில்லை எனவும் தெரிவிக்கின்றார்கள். ஆனாலும் நமது பாதுகாப்பிற்காக Password ஐ மாற்றி விடுவது நல்லது.

Device Audit
எந்தெந்த கருவிகள் மூலம் உங்களது ஃபேஸ்புக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு முறை அலசிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஃபேஸ்புக்கில் Security and Login என்ற பக்கத்தில் Where You’re Logged In என்ற லின்க்கை கிலிக் செய்தால், யார் யார் எந்தெந்த இடங்களில் இருந்து எந்தெந்த device இன் மூலம் உங்களது கணக்குகளை இயக்கியிருக்கின்றார்கள் என அறிந்து கொள்ளலாம். சந்தேகத்திற்கிடமான இடமோ அல்லது Device இருந்தால் அதனை remove செய்து விடுங்கள்.

Two Factor Authentication
நீங்கள் இதுவரை Two-Factor Authentication என்கின்ற மேலதிக பாதுகாப்பு முறையினை activate செய்யவில்லையாயின் அதனை active செய்து விடுங்கள். இதன் மூலம் யாராவது இனந்தெரியாத நபர் ஒருவர் ஒரு புதிய device இல் இருந்து உங்களது ஃபேஸ்புக் கணக்கில் நுளைய முற்பட்டால் உடனே ஒரு 6 இலக்க code ஒன்றை கேட்கும். அந்த 6 இலக்க code உங்களது கையடக்கத் தொலைபேசிக்கு sms செய்யப்படும். அது நீங்களாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் அந்த code ஐச் செலுத்தி உள்ளே நுழையலாம்.

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot