மெய்நிகர் உலகில் (MetaVerse) பெண் அவதாருக்கு பாலியல் வல்லுறவு! - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Wednesday, February 23, 2022

மெய்நிகர் உலகில் (MetaVerse) பெண் அவதாருக்கு பாலியல் வல்லுறவு!



நாற்பத்து மூன்று வயதுடைய 'நீனா' தனது 3D glassesஐயும், ஹெட் செட்டையும் அணிந்துகொண்டு, meta வுக்குள் 'லொகின்' ஆகிறார். அந்த 'க்ராபிக்ஸ்' உலகில், அவளது 'அவதார்' தனியாகப் பயணிக்கிறது.திடீரென எதிரே வந்த ஆண் avatar களின் குழுவொன்று, நீனாவைக் காரணமேதுமின்றி, கதறக் கதற வல்லுறவுக்கு உற்படுத்துகிறது! தனது பலம் அனைத்தையும் பாவித்து அதிலிருந்து மீள முயற்சிக்கும் நீனா, தோற்றுப் போகிறாள்.
"I was gang raped in metaworld" சம்வத்துக்குப் பின் அவள் பதிவிட்ட கருத்தில், விளக்கியிருக்கிறாள்.
இது ஒரு உண்மைச் சம்பவம்.

அங்கேயுமா??? மெய்நிகர் உலகில் கூட, ஒரு 'பெண் அவதார்', பாதுகாப்பின்றிச் செல்ல முடியாதா? என்று கேட்பவர்களும்
கூடவே,
"என்னாது! , மெய்நிகர் உலகமா?" என்று கேட்பவர்களும் பதிவைப் படிக்கலாம்.

Meta எனப்படுவது facebook இன் புதிய பெயர் என்று பிரபல்யமடைந்திருந்தாலும், 'Metaverse' என்பது 'இணையத்தின் எதிர்காலமாகவே' , அதன் உரிமையாளர்களால் மார்க்கட் செய்யப்படுகிறது.

இலங்கையிலிருக்கும் ஓரிளைஞன், 'லொஸ் ஏன்ஜல்ஸிலுள்ள' coffee ஷொப் ஒன்றில், மாலை நான்கு மணிக்கு , ஒரு டேபிலை புக் செய்து, மெல்பனைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு அந்திப் பொழுதைக் கழிப்பதற்கும், இருவருக்கும் பிடித்திருந்தால், திருமணம் கூடச் செய்து கொள்வதற்கும் Meta இடம் தருகிறது.

ஒரு வீடியோ chat அல்லது chat room தரும் அனுபத்தையும் தாண்டிய, உண்மைக்கு நிகரான அனுபவமொன்றாக இது இருக்கப் போகிறதாம். இரண்டு அவதார்களும் சேர்ந்து, தாஜ்மஹலின் முன் photo பிடித்து விட்டு, வீடு திரும்பவும் முடியும். செல்லுமிடமெல்லாம் ஒரே ஆடையோடு செல்ல வேண்டியதில்லை. வீதியோரக் கடையொன்றினுள் புகுந்து shopping முடித்து விட்டு, ஆற அமரச் செல்லலாம்.
" you look awesome" என்று புகழ்ந்து, அடுத்தவரை கன்னம் சிவக்க வைக்கலாம்.

தனது வீட்டின் அறையிலிருந்து கொண்டு, இந்த அத்தனையையும் நிஜம் போலவே அனுபவிக்கலாம் என்கிறார்கள், meta வின் மார்க்கட்டிங் டீம்.

ஹெட்செட், க்லாஸஸ் இற்கு மேலதிகமாக, பாவணையாளரின் மூளையின் கணத்தாக்கங்களை வாசித்துணரும் உணரிகள் , குறித்த நபருக்குரிய அவதாரின் உணர்ச்சிகள் முகபாவணைகளையும் கட்டுப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்படும். இதற்காக மும்முரமாக உழைக்கிறது AI team.

ஆனால் என்ன, இவற்றில் பலவற்றை access செய்வதற்கு காசு தேவைப்படும். தன்பாட்டில் chat பண்ணிக் கொண்டிருந்த இளைஞர் யுவதிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து, இந்த ஷொப்பிங் சமாச்சாரம், தாஜ்மஹால் டூர்,வகையிலான எல்லாவற்றிற்கும் காசு debit ஆகிக் கொண்டே இருக்கும்.

Bit coin வடிவில், அல்லது, ஏதாவதொரு நாணய மாற்று முறையில், 'மெட்டா உலகெங்கும்' விற்பனையாகும் அத்தனை வசதிகளும் வாய்ப்புக்களும், அவ்வப்போதோ, அடிக்கடியோ, வாங்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இதற்கு மேலதிகமாக, இத்தனை காலமும் நம் privacy ஐ மட்டுமே திருடிக் காசு பார்த்துக் கொண்டிருந்த இந்த உயிரற்ற செயலி, இனிமேல் நம் உணர்வுகள், ஆசைகள் மற்றும் தேவைகளையும் விற்கத் துவங்கும்.

இதனை வாங்கும் விளம்பர உலகம், தன் விளம்பரங்களை மிக effectice ஆக பிரபல்யப்படுத்தும்.

இதுபோக, ஏற்கனவே நிஜ உலகில் திருமணமானவர்கள், மெட்டாவில் மீண்டும் இன்னுமொரு அவதாரை மணமுடிப்பார்கள். அந்த அவதாருக்கு இவர்களிடம் எந்தளவு உரிமையிருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

"இதெல்லாபம் நம்புற மாதிரியா இருக்கு???" என்று ஓரக்கண்ணால் பார்ப்பவர்கள், முகநூல் அறிமுகமான போது வந்த கேள்வி பதில்களையும் கொஞ்சம் recap பண்ணிப் பார்க்கவும்.

முகநூல் அறிமுகமான போது, அதனை ஏற்றுக் கொள்ளக் கஷ்டப்பட்ட எத்தனையோ பேர், திட்டித் தீர்த்த எத்தனையோ பேர், புரியாமல் தவித்த எத்தனையோ பேர், காலவோட்டத்தில், கட்டாய அக்கவுண்ட் ஒன்றை ஆரம்பித்து படு அக்டிவ்வாக வேறு இருக்கவில்லையா என்ன? இதே போன்று மெட்டாவினுள்ளும் வர்ச்சுவல் சனத்தொகை அதிகமாகிக் கொண்டே செல்லலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

தமது பிள்ளைகள் மெட்டாவினுள் எப்படியெல்லாம் சுற்றித்திரிகிறார்கள் என்பதை அறியாத, 'அப்பாவி'(unupdated!) பெற்றோர், என்னென்ன அதிர்ச்சிகளை சந்திக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

உலமாக்கள் பலர், இதனை ஹராம் என்று பத்வா கொடுத்திருக்கிறார்கள்.
மேற்கத்தேய உலகமும், இவற்றை விட்டு விலகி ஓடிக் கொண்டிருக்கிறது. Meta வின் பங்குகளின் வரலாறு காணாத வீழ்ச்சி ,இதற்கு நல்லதொரு சான்று.

கிட்டிய எதிர்காலத்தில் மெட்டாவின் ஆட்சி ஆரம்பமாகுமா? இல்லை இண்டநெட் யுகமே அடியோடு சரிந்து விடுமா, பொறுத்திருந்து பார்ப்போம்.

-ரும்மான்- B.Sc( hons) comp scie

பங்குகளின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து இன்னுமொரு பதிவில் பார்க்கலாம்.

படம்- நீனாவும் அவதாரும்

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot