நீங்கள் எந்த உலாவியை பயன்படுத்தினாலும் நீங்கள் பார்க்கும் பக்கங்களில் விளம்பரங்கள் தோன்றி உங்கள் இணைய இணைப்பு வேகத்தினை பாதிப்பதுடன், உங்கள் தகவல் பரிமாற்ற அளவுகளில் பெரும்பகுதியை வீணடிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் உங்கள் உலாவியை அடிக்கடி செயல் இழக்கவும் செய்கின்றன. இந்த பதிவு நீங்கள் எந்த Browser பாவித்தாலும் இவ்வாறான விளம்பரங்களை முற்றிலும் தடை செய்வது தொடர்பாக விளக்குகிறது.
நீங்கள் Adblocker எனும் நீட்சியை பயன்படுத்தி கொண்டு இருந்தால் இப்பதிவை தொடர்ந்து வாசிக்க வேண்டியதில்லை. அதை பற்றியே இப்பதிவு அலசுகிறது.
இவ்வசதி அறிமுகமாகி நீண்ட காலம் ஆகிறது. ஆனால் Anas Grafix Website க்கு வரும் வாசகர்காகிய உங்களில் 600 பேரில் ஒருவர் தான் இந்த வசதியை பயன்படுத்துவது தெரிகிறது. பல வழிகளில் உதவும் இந்த வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு இப்பதிவை எழுதுகிறேன்.
விளம்பரங்களை ஏன் தடை செய்ய வேண்டும்?
பொதுவாக ஒரு இணைய பக்கம் 2 MB அளவில் இருந்தால் அதில் விளம்பரங்களுக்கு 20% எடுக்கபட்டு இருக்கும்.
Web pages விரைவாக தரவிறங்கி முடிய
உங்கள் Data limit / Fair User policy முடிவடைவதை தடுக்க
Browsers அளவுக்கு அதிகமான விளம்பரங்களால் அடிக்கடி உறைவதை தடுக்க
அநாகரிகமான விளம்பரங்களை முற்றிலும் தடை செய்ய
நிச்சயம் இறுதி நோக்கத்துக்காகவாவது இதை நீங்கள் பயன் படுத்த வேண்டும். Adsense மட்டும் ஒரு விளம்பர சேவை அல்ல, வேறு நூற்றுக்கணக்கான விளம்பர வழங்குனர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் அநாகரிகமான விரும்ப தகாத விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். இது நம்மை அறியாமலே நாம் பார்க்கும் பக்கங்களில் தோன்றி இருக்கும். நமது கணணி திரையை பார்க்கும் வேறு ஒருவர் நாம் இவ்வாறான விடயங்களில் மூழ்கி போய் இருக்கிறோம் என்று எண்ணி விலகி விடுவார். மொத்தத்தில் நம்மை அறியாமல் இவ்விளம்பரங்கள் நமக்கு எதிரி ஆகிறது. பெரும்பாலும் இவ்வாறன அனுபவங்களை (?) நீங்கள் File sharing, Torrent தளங்களில் பெற்று இருக்க முடியும்
இதை யார் பயன்படுத்த முடியும்?
கணனியில் இணையத்தில் உலாவரும் அனைவரும் பயன்படுத்த முடியும். பெரும்பாலும் பிரபலமான Browsers க்கு இந்த வசதி இலவசமாக கிடைக்கிறது.
இதன் நன்மைகள் என்ன?
உங்கள் இணையம் உலாவல் சிறப்பானதாக அமையும்
உங்கள் தனி உரிமை, கண்ணியம் பாதுகாக்கப்படும்.
உலாவிகள் Crash ஆவது குறையும்.
இவை youtube போன்ற தளங்களிலும் Video க்களில் உள்ள விளம்பரங்களை கூட நிறுத்துவது தொடர்சியான இடையூறு அற்ற அனுபவத்தை வழங்குகிறது.
இதன் தீமைகள்?
பயன்படுத்துவதால் எந்த தீமையும் உங்களுக்கு இல்லை. சிலர் Add-on அல்லது Extension பாவிப்பதால் உலாவிகள் வேகம் குறைவதாக எண்ணுகிறார்கள். உண்மையில் இதை பாவிக்காவிட்டால் தான் இந்த நிலைமை ஏற்பாடும்.
இதன் தீமை வலை பக்கத்தை நடத்துபவருக்கு தான். அவருடைய வருமானம் குறையும். அவர் வருமானம் குறைகிறது என்பதற்காக நமது கண்ணியத்தை விற்க முடியாது தானே.
எவ்வாறு இயங்குகிறது?
இணைய பக்கம் தரவிறங்கும் போது விளம்பரங்களுக்கு உரிய Scripts இயங்குவதை இது தடை செய்கிறது. இதன் மூலம் விளம்பரம், image ஆகவோ அல்லது text ஆகவோ அல்லது Flash ஆகவோ எப்படி இருந்தாலும் இவை தரவிரங்குவதே இல்லை.
இதை விட சில சிக்கலான Elements அல்லது widget களை கூட தடை செய்ய முடியும். உதாரணமாக Friend connect உள்ள வலைபூக்கள் கொஞ்சம் தாமதிக்கும். இதற்கு முதல் தடவை தோன்றும் போது அதில் Right click செய்து Block This Ads என்பதை கொடுத்தல் போதும். அடுத்த தடவை வரும் போது பக்கம் மின்னல் வேகத்தில் வரும்.
இதை பயன்படுத்துவது எப்படி?
விளம்பரங்களை தடை செய்யும் வேலையை செய்ய ஏராளமான addons இருக்கின்றன. இவை பெரும்பாலும் 300 KB அளவில் இருப்பதோடு ஒரே click மூலம் தரவிறக்கி நிறுவ கூடியதாகவும் இருக்கும். முன்னணி மூன்று உலாவிகளுக்கு இதை தரவிறக்கி பயன்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்.
Google Chrome பாவனையாளர்கள்
- Extension : CLICK HERE
- அளவு: 300 kB
FireFox பாவனையாளர்கள்
- Extension: CLICK HERE
- அளவு: 200KB
- நிறுவும் முறை: தரவிறக்கியவுடன் தானாகவே நிறுவப்படும். தேவை பட்டால் சில படிமுறைகள் தோன்றும். restart செய்வது சில் சமயம் அவசியமாகலாம்.
Internet Explorer 7, 8, 9 பாவனையாளர்கள்
இதற்கான உதவிகள் மிக குறைவு. நீங்கள் இப்போதும் IE browers பயன்படுத்துவது தொழில்நுட்பத்தில் நீங்கள் இன்னும் கூர்ப்படையவில்லை என்பதை உணர்த்துகிறது .என்றாலும் உங்களுக்காக ஒரு சிலவற்றில் ஓரளவு சிறந்தது.
- Extension: CLICK HERE
- அளவு: 1MB
- நேரடியாக தரவிக்க: One Click Downloadoad (நீங்கள் Chrome உலாவியில் இப்போது உலாவிக்கொண்டு இருந்தால் மட்டும் கிளிக் செய்யுங்கள்)
இதை நிறுவுவது மென்பொருள் நிறுவும் முறையை ஒத்தது. ஏனைய உதவிகள் Homepage இல் உள்ளது.
நீங்களும் இப்போதே இதை நிறுவுங்கள். பாதுகாப்பான உலாவல் Adblocker உடன் ஆரம்பம்…..
No comments:
Post a Comment