அப்படி என்ன சேவையை இந்த Etisalat நிறுவனம் வழங்குகிறது என்று யோசிக்கிறீங்களா? தொலைந்த SIM ஐ நம்முடைய வீட்டிற்கே இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள் தெரியுமா? இதற்கு அவர்களுடைய Branch இற்கு போக தேவையில்லை ! வீட்டில் இருந்தவாரே Call ஒன்று எடுத்தால் போதும் உங்கள் வீடு தேடி SIM வரும்.
Dialog, Mobitel, Airtel, Hutch போன்ற நிறுவனங்களின் SIM தொலைந்து போனால் அவர்களுடைய Branch இற்கு சென்று 100 ரூபாய் கொடுத்து நம்முடைய SIM இனை மீள பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் எல்லாம் அறிந்து இருப்பீர்கள்.ஆனால் Etisalat இன் SIM தொலைந்து போனால் அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு சொன்னால் போதும் ....அவர்கள் உங்களிடம் சில கேள்விகள் கேட்பார்கள்.
தொலைபேசி இலக்கம்(உங்களுடைய எடிசலாட் நம்பர்)
உங்கள் பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (N.I.C)
இவை அனைத்தும் சரியாக இருந்தால் உங்கள் வீட்டு முகவரி கேட்பார்கள் கொடுங்கள்.எப்படியும் ஒரு மாதத்திற்குல் அந்த SIM உங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடும், எந்தவித கட்டணமும் இல்லாமல்.
எடிசலாட் தனது போட்டி நிறுவனங்களுக்கு (Dialog, Mobitel, Airtel, Hutch) மாறாக செயற்படுவது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது ஏன் என்றால் இதை பார்த்து மத்த நிறுவனங்களும் விரைவில் அறிமுகப்படுத்தும் அல்லவா!
இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வரவேற்க தக்க பதிவு.. சகோ!
ReplyDelete