PUBG | பப்ஜி விளையாட்டு ஆபத்தா? விளையாடும் முறை என்ன? - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Friday, June 12, 2020

PUBG | பப்ஜி விளையாட்டு ஆபத்தா? விளையாடும் முறை என்ன?


அறிமுகம்

பப்ஜி (PUBG) (Player Unknown's Battle Grounds) என்பது பல நபர்கள் இணைந்து, இணையதளத்தில் விளையாடும் ஓர் இணையதள விளையாட்டு ஆகும். இது தென்கொரியாவினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிகழ்பட விளையாட்டு நிறுவனமான புளூஹோலின் கிளை நிறுவனமான பப்ஜி நிறுவனத்தால் உருவாக்கி மேம்படுத்தப்பட்டது ஆகும். இந்த விளையாட்டு 2000 ஆம் ஆண்டில் வெளியான பேட்டில் ராயல் எனும் சப்பானியத் திரைப்படத்தினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கிரீன் என்பவரின் வழிகாட்டுதலின் படி சில மாற்றங்களை (தனி நபர் விளையாட்டு) இந்த விளையாட்டில் செய்துள்ளனர். இந்த விளையாட்டில் நூறு வீரர்கள் வான்குடை மூலம் தனித் தீவில் இருப்பது போலவும், அங்குள்ள ஆயுதங்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு தங்களைப் பாதுகாத்துக்கொண்டு மற்றவர்களைக் கொலை செய்வதைப்போன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கும். நேரம் அதிகரிக்க, அதிகரிக்க பாதுகாப்பான இடங்களின் அளவானது குறைந்துகொண்டே செல்லும். இறுதியாக இருக்கும் நபர் அல்லது அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

விளையாடும் முறை

PUBG விளையாட்டானது பல நபர்கள் ஒரே சமயத்தில் விளையாடும் பேட்டில் கிரவுண்ட் எனப்படும் சுடுதல் விளையாட்டு வகையைச் சார்ந்தது ஆகும். இதில் அதிகபட்சமாக நூறு நபர்கள் ஒரே சமயத்தில் விளையாட இயலும். இதில் விளையாடத் துவங்கும் முன் ஒரு வீரர் தான் தனியா விளையாட வேண்டுமா அல்லது இருவரா அல்லது குழுவாக விளையாட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க இயலும். இந்தக் குழுவில் அதிக பட்சமாக நான்கு நபர்கள் விளையாடலாம். இறுதியாக இருக்கும் நபர் அல்லது அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

பப்ஜி விளையாட்டு ஆபத்தா?

இணையவாசிகள் மத்தியில், பப்ஜி (Player Unknown's Battle Grounds - PUBG) விளையாட்டு செல்வாக்கு மிக்கதாக இருப்பதோடு சர்ச்சைக்குரியதாகவும் இருக்கிறது. கேம் சூழலில் எதிராளிகளைச் சுட்டுத்தள்ளி ஒற்றை ஆளாக எஞ்சி நிற்கும் இந்த சாகச விளையாட்டு அதன் பயனாளிகளைப் பெரிதாகக் கவர்ந்திருக்கும் நிலையில், இந்த விளையாட்டின் தாக்கம் குறித்துப் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலை இருக்கிறது.

பப்ஜி மீதான ஆர்வம் மோகமாக மாறி பல விபரீதங்களுக்கு காரணமாக இருப்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிவரும் சூழலில், பல கல்வி நிறுவனங்களிலும் ஒரு சில நகரங்களிலும் இந்த விளையாட்டிற்குக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சர்ச்சைகளை மீறி, பப்ஜி விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கதாகத் தொடர்கிறது.

பப்ஜி விளையாட்டை அறியாதவர்களுக்கு, இந்த விளையாட்டில் அப்படி என்னதான் இருக்கிறது எனக் கேட்கத் தோன்றலாம். பப்ஜி விளையாட்டு ஏன் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது என்பது தனி ஆய்வுக்குரியது என்றாலும், உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கும் இந்த விளையாட்டு குறித்துப் பரவலாகப் பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பப்ஜியின் பிரம்மா!

இதுவரை வெளியான வீடியோகேம்களில் முன்னணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு பப்ஜி நன்கறியப்பட்டதாக இருக்கிறது. எல்லாம் சரி, பிரெண்டன் கிரீனை (Brendan Greene) உங்களுக்குத் தெரியுமா? இவர்தான் பிளேயர் அன்நோன்ஸ் பேட்டில்கிரவுண்ட் என்பதன் சுருக்கமான பப்ஜி விளையாட்டை உருவாக்கிய பிரம்மா!

அயர்லாந்துகாரரான கிரீன், அடிப்படையில் கிராஃபிக் டிசைனர். வீடியோ கேமில் பெரும் ஆர்வம் கொண்டவர். பணி நிமித்தமாக பிரேசிலில் இருந்த காலத்தில் அவரே பல வீடியோ கேம்களை விளையாடியிருக்கிறார். அவர் விளையாடிய பெரும்பாலான விளையாட்டுகள் ஒரே மாதிரி இருப்பதாகவும், அவற்றை விளையாடும் விதம் அப்படியே மனப்பாடம் செய்துவிடும் அளவுக்கு இருப்பதாகவும் நினைத்து அவர் அலுத்துப்போனதாக விக்கிபீடியா தகவல் மூலம் அறிய முடிகிறது.

இந்நிலையில் ஜப்பானிய சண்டைப் படமான, பேட்டில் ராயல் படத்தின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட டேஇசட் எனும் வீடியோ கேமால் ஊக்கம் பெற்று அதே பாணியில் அர்மா2 எனும் வீடியோ கேமை உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாக, ஹங்கர் கேம்ஸ் எனும் நாவலின் தாக்கத்தால் அவர் உருவாக்கிய கேம்தான் பப்ஜி விளையாட்டாக, 2017இல் அறிமுகமானது. முதலில் கம்ப்யூட்டர்களில் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு, கடந்த ஆண்டு மொபைல் போன்களிலும் அறிமுகமாகி வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.

அடுத்து என்ன?

பப்ஜி விளையாட்டு அதன் பயனாளிகளுக்கு அலுக்காவிட்டாலும் அதன் பிரம்மாவுக்கு அலுத்துவிட்டது. ஆம், கிரீன் பப்ஜி விளையாட்டில் இருந்து விலகிக்கொள்வதாக அண்மையில் அறிவித்துள்ளார். பப்ஜி கேமுக்கான இயக்குநர் பதவியிலிருந்து விலகிக்கொண்டு, பப்ஜி கார்ப்பரேஷனில் புதிய பிரிவு ஒன்றுக்கு அவர் சென்றுள்ளார். சிறப்பு விளையாட்டுகளில் இந்தப் பிரிவு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரிவுக்காகப் புதிய குழுவை அமைப்பதில் கவனம் செலுத்துவதற்காக ஆம்ஸ்டர்டம் நகருக்கு குடி பெயர்ந்துள்ளார். தனக்கு பேட்டில் ராயல் விளையாட்டுகள் போரடித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். எனவே பப்ஜி 2 வெளியாக வாய்ப்பில்லை. ஆனால் கிரீன் அடுத்து என்ன உருவாக்கப்போகிறார் என்பது சுவாரஸ்யமான கேள்வி.

ஏன் அந்தப் பெயர்?

மற்ற வீடியோ கேம்களோடு ஒப்பிட்டால், பப்ஜி விளையாட்டின் பெயர் கொஞ்சம் விநோதமாக இருக்கும். அதென்ன, பிளேயர் அன்நோன்ஸ் பேட்டில் கிரவுண்ட் (Player Unknown's Battle Grounds), அர்த்தமில்லததாக இருக்கிறதே என நினைக்கலாம். இந்தப் பெயர், கிரீன் வீடியோ கேம் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது தனக்காக வைத்துக்கொண்ட பெயர். வீடியோ கேமை உருவாக்கியபோது அந்த பெயரையே கேமுக்கும் வைத்துவிட்டார். பெயரும் பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டது.பப்ஜி வரைபடம்

பப்ஜி விளையாட்டில் அதன் வழிகாட்டி வரைபடம்தான் அடிப்படை. இராஞ்சல் (Erangel) என்பதே பப்ஜியின் முதன்மை வரைபடம். கிரீனின் செல்ல மகளின் இரனையும் தேவதையைக் குறிக்கும் ஏஞ்சல் எனும் வார்த்தையையும் கலந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டதாம்.

விளம்பரம் இல்லை

பப்ஜி விளையாட்டு ஆரம்பம் முதல் விளம்பரம் இல்லாமல் வளர்ந்திருக்கிறது. அறிமுகமானபோது விளம்பரம் செய்யப்படவில்லை. பெரும்பாலும் பயனாளிகளின் வாய்மொழி விளம்பரத்தால் பிரபலமானது. பயனாளிகளில் பலர் பித்துப் பிடித்தது போல தொடர்ந்து விளையாடும் பழக்கம் கொண்டிருந்ததால் மேலும் பிரபலமானது. ஆனால், டிவிகளில் முதல் முறையாக மொபைல் வீடியோ கேம்களுக்கான விளம்பரமாக பப்ஜி விளம்பரம் வெளியானது.

சாதனை கேம்

பப்ஜி விளையாடு பலரும் ஒன்றாக சேர்ந்து விளையாடக்கூடிய கேம். ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆன்லைனில் விளையாடலாம். ஒரே நேரத்தில் அதிகம் பேர் சேர்ந்து விளையாடிய கேம் எனும் சாதனையையும் படைத்திருக்கிறது. 2017 டிசம்பர் மாதம் 3,106,358 பேர் பப்ஜியை ஒரே நேரத்தில் விளையாடியுள்ளனர்.

வெற்றி வாசகம்

பப்ஜி விளையாடும் பலரும் காணத் துடிக்கும் வாசகம், வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் என்பதாகும். இந்த வாசகம் திரையில் தோன்றினால், கேமில் வென்றுவிட்டதாக அர்த்தம். இது அத்தனை எளிதில் சாத்தியம் இல்லை என்பது வேறு விஷயம். இந்த வாசகம், 1930களில் அமெரிக்காவில் பெரும் பொருளாதாரத் தேக்க நிலை இருந்த சூழலில் சூதாடிகள் மத்தியில் பிரபலமாக இருந்த வாசகம். காசு வைத்து சூதாடி ஜெயித்தால் அன்று இரவு சிக்கன் விருந்து சாப்பிடலாம் என அர்த்தம்.

பப்ஜி எந்திரன்கள்

பப்ஜி விளையாட்டில் பிளேயர்கள் தவிரப் பலவித எந்திரன்கள் உண்டு. இவை எல்லாம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பாட்கள். இவை சுடும் திறன் இல்லாதவையாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. புதியவர்கள் உள்ளே வரும் போது அவர்கள் உடனடியாகத் தோற்றுபோய் வெளியேறிவிடக் கூடாது எனும் நோக்கத்துடன் இந்த பாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு விதத்தில் பப்ஜி வெற்றிக்கு இதுவும் காரணம்.

பப்ஜியில் தடை

பப்ஜி விளையாட்டு ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக பலரும் இதை தடை செய்ய வேண்டும் என பேசுவதை கேட்டிருக்கலாம். ஆனால் பப்ஜி கேம் ஆடுபவர்கள் தடை செய்யப்படலாம் என்பது உங்களுக்குத்தெரியுமா? ஆம், பப்ஜி விளையாடும் விதத்தில் முறையற்று நடந்துகொள்வது கண்டறியப்பட்டால் 100 ஆண்டு வரை கேம் ஆடத் தடை விதிக்கப்படலாம். எனவே பப்ஜியில் ஜெயிப்பதற்காக ஹைடெக் குறுக்கு வழிகளைக் கையாண்டால் வெளியேற்றப்படுவது நிச்சயம்.

Credits: Wikipedia, Minnambalam, NDTV, Google

3 comments:

  1. Thank you so much @ admin for share your valuable thoughts and ideas We always enjoy your articles its inspired a lot by reading your articles day by day. So please accept my thanks and congrats for success of your latest series. We hope, you should published more better articles like ever before
    Futures & Options trading in India

    ReplyDelete
  2. Thank you so much @ admin for share your valuable thoughts and ideas We always enjoy your articles its inspired a lot by reading your articles day by day. So please accept my thanks and congrats for success of your latest series. We hope, you should published more better articles like ever before
    Funnel Management solutions

    ReplyDelete

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot