❓ZOOM Class களை Mobile மற்றும் PC களில் Record செய்து மீள படிப்பது or இன்னொருவருக்கு Share செய்வது எப்படி?
COVID கால சூழ்நிலையில் இன்றைய மாணவர்களின் கல்வி நவீன தொழில்நுட்பத்தின்பால் செல்லவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான வகுப்புகள் Whatsapp, ZOOM , MS TEAMS ஊடாகவே நடாத்தப்படுகின்றன.
✅ இதில் குறிப்பாக ZOOM வகுப்புகள் Coverage பிரச்சினை, கட்டண பிரச்சினை 😂 காரணமாக மாணவர்கள் சரியான நேரத்தில் வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் போகும்போது இவ்வாறான Recording செய்து சகமாணவர்களுக்கு உதவலாம்.
✅ அத்தோடு சில கடினமான பாடங்களை மீள கற்பதற்கும் உதவும்.
✅ பலருக்கு இது தெரிந்தவிடயமாக இருந்தாலும்; சரியான செயலி கிடைக்காதவர்களுக்கு வழிகாட்டும் முகமாக:
🛑 Android Smart Phone இல் Record செய்தல்:
இதற்கு Google Play Store இல் பல App கள் இருந்தபோதும் கீழுள்ள App யே பல Million கணக்கானவர்களால் Download செய்யப்பட்டு 4.7 Rating ஐயும் கொண்டுள்ளது. அதனை பின்வரும் link ஊடாக Android செயலிகளில் தரவிறக்கம் செய்யலாம்.
Screen Recorder & Video Recorder - XRecorder (ziyad aia) 21Mb
https://play.google.com/store/apps/details?id=videoeditor.videorecorder.screenrecorder
❌ ❌ ❌ #Correction: Zoom செயலியானது Mobile Phone (Android & iOS) களில் Recording ஐ Disable பண்ணி இருப்பதால் Video Record பண்ண முடிந்தாலும் Audio Record பண்ண முடியாது.
இதனை செயற்படுத்த வேண்டுமாயின்
🛑 01. முதலில் XRecorder இன் Record ஐ On செய்தபின் ZOOM Start செய்ய வேண்டும்.
🛑 02. Blutooth மூலம் External Speaker ஒன்றை இணைத்து வெளியில் இருந்து சத்தம் வருவதுபோல் செய்தால் மட்டுமே Audio சாத்தியமாகும். (வடபோச்சே)
எனவே இலகுவான வழி Computer ஊடாக Record செய்வது.
✅ இதனை (XRecorder) Install செய்தபின் Settings க்கு சென்று Save Location ஆக External (SD Card) ஐ கொடுத்துவிட்டால் Phone Memory பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.
✅ அதேபோல் Resolution ஐ 360p என்று கொடுத்தால் Memory (Space) தேவைப்படும் அளவையும் குறைக்கலாம்.
இந்த செயலியில் Screen Shot, Video Editing, Brush என வேறுபல வசதிகளும் உண்டு. (விரிவஞ்சி தவிர்க்கப்பட்டுள்ளது.)
✅ Record செய்தபின் நேரடியாக Whatsapp, Viber, Telegram செயலிகள் மூலம் அடுத்தவர்களுக்கும் பகிர்ந்து உதவலாம்.
இருந்தபோதும் ZOOM Audio Record பண்ண முடியாது. 😭
🛑 PC / Laptop இல் Record செய்தல்:
இதற்காக பலநூறு Software கள் காணப்பட்டபோதும் அவை Trial ஆகவோ, watermark உடனோ, Registration செய்யவேண்டியோ இருக்கும். கீழுள்ள Links இன் Free Version களுக்கு அந்த பிரச்சினைகள் இல்லை.
💐 Option 01:
Apowersoft Free Screen Recorder
https://download.cnet.com/Apowersoft-Free-Screen-Recorder/3000-13633_4-75959899.html
✅ மிக இலகுவாக கையாளக்கூடிய திரையை (User Interphase) கொண்டுள்ளது.
✅ Record செய்யவேண்டிய திரையின் அளவு , Webcam On/Off , Mic On/Off என்பவற்றை தேவைக்கு ஏற்ப மாற்றி Record ஐ அழுத்தவும்.
✅ Record செய்வதை நிறுத்த Bottom Bar இன் வலதுபக்க முனையில் Icon ஐ Right Click செய்து நிறுத்தலாம்.
✅ விரைவாக Recording Save பண்ண இந்த மென்பொருளை பாவிக்கலாம். (புதிய version இல் email மூலம் Registration செய்யவேண்டிய வரலாம்). Record பண்ணிய File களை மின்னல் வேகத்தில் Save செய்யலாம். (My Favorite)
💐 Option 02;
ActivePresenter: Download Link:
https://atomisystems.com/download/
✅ இதனை Computer இல் Install செய்தபின் திரையில் இரண்டாவதாக உள்ள Record Video வை Click செய்யவேண்டும்.
✅ Record செய்யவேண்டிய திரையின் அளவு , Webcam On/Off, Mic On/Off, என்பவற்றை தேவைக்கு ஏற்ப மாற்றி Record ஐ அழுத்தவும்.
✅ Record செய்வதை நிறுத்த Cntrl + End அல்லது Bottom Bar இன் வலதுபக்க முனையில் Active Presenter ஐ Right Click செய்து நிறுத்தலாம்.
✅ நிறுத்தியவுடன் Active Presenter Open ஆகும். அதன் மேல் Bar இல் Export -> Video என்பதை Click செய்து எங்கு Save செய்யவேண்டும் என்பதை குறிப்பிட்டு Save பண்ணிக்கொள்ளலாம்.
❌ இதன் பிரதிகூலமாக பெரிய Video க்கள் Save ஆக நேரமெடுக்கும்.
💐 Option 3:
✅ Windows 10 பாவனையாளர்களுக்கு அதில் By Default ஆக காணப்படும் Recorder மூலம் screen Record பண்ணலாம்.
✅ இதற்காக Record பண்ணவேண்டிய செயலியை முதலில் Open செய்ய வேண்டும். உதாரணமாக Zoom.
✅ பின்னர் Key Board இல் உள்ள Windows + G ஐ அழுத்தும்போது Recording திரை தோன்றும்.
இதன் மூலமும் முழு திரையை Record செய்யலாம்.
இதுபோன்று வேறு வழிமுறைகள் இருந்தால் Comment இல் பதிவிடுங்கள்.
🛑🛑 Disclaimer
Smart Phone கள் மற்றும் தொழில்நுட்பம் என்பவை கத்தி போன்றவை.
நல்லவழியிலும் பாவிக்கலாம் துஷ்பிரயோகமும் செய்யப்படலாம்.
பெற்றாரின் கண்காணிப்பின்கீழ் பிரயோசனமான வேலைகளுக்கு மாத்திரம் பாவிப்போமாக.
(இவ்வளவெல்லாம் எதுக்கு Zoom லேயே Host/ Co-Host க்கு Recording செய்யும் வசதி இருக்கு. ஆசிரியரே Record செய்து தேவையான மாணவர்களுக்கு உதவலாம் என்று சொல்லிக்கொண்டு கிளம்பினார் அந்த அதிபர் 😂.)
By: Ziyad Aia
No comments:
Post a Comment